புதன், 20 ஏப்ரல், 2016

நெல்லையில் வைகோ தீவிர பிரசாரம்... கிரேக்க .....பெருவளசோழன் ....பிஸ்மாக் ..ரஸ்புடின்......ஜோரா கைதட்டுங்க

நெல்லை : நெல்லை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் தி.மு.ராசேந்திரன் வெளியிட்ட அறிக்கை: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக - மக்கள் நல கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை மாவட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று (19ம் தேதி) பிரசாரம் செய்கிறார். மாலை 3 மணிக்கு சங்கரன்கோவில் தேரடியில் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமாரை ஆதரித்தும், மாலை 4 மணிக்கு புளியங்குடி கேவிகே சாமி திடலில் வாசுதேவநல்லூர் தொகுதி ேவட்பாளர் சமுத்திரகனியை ஆதரித்தும், மாலை 4.45 மணிக்கு கடையநல்லூர் மணிக்கூண்டு பகுதியில் தேமுதிக வேட்பாளர் கோதை மாரியப்பனை ஆதரித்தும், மாலை 5.30 மணிக்கு தென்காசி மேலமாசி வீதியில் தமாகாவை ஆதரித்தும் வைகோ பேசுகிறார்..கிரேக்க நாட்டின் ஒப்பற்ற வீரன் அலெக்சாண்டரின் உணவு தாமதமாகி விட்டது என்று தளபதி ஸ்பாட்டகஸ் பொங்கி எழுகிறான்....மங்கோலிய வீதிகளில் புழுதி படிய செங்கிஸ்கான் தனது குதிரையின் குழம்புகள் நோகுமே என்று சீன சக்கரவர்த்திக்கு குப்லாய் கானுக்கு செய்தி அனுப்புகிறான் அவனோ இத்தாலிய வீரன் மாசினிக்கு சாம்பார் செய்து கொடுக்க ஜேர்மனிய தளபதி பிஸ்மாக்கின் உதவியை நாடுகிறான் அங்கேதான் நமது தமிழக வீரன் மதிமுக தொண்டன் நிமிர்ந்து நிற்கிறான்......எங்கே எல்லோரும் ஜோரா கைதட்டுங்க !


மாலை 6.30 மணிக்கு ஆலங்குளம் காமராஜர் சிலை அருகே தேமுதிக வேட்பாளர் ராஜேந்திரநாத்தை ஆதரித்தும், நெல்லை தேரடியில் இரவு 7.30 மணிக்கு நெல்லை தொகுதி தேமுதிக வேட்பாளர் மாடசாமியை ஆதரித்தும் பிரசாரம் செய்கிறார். இரவு 8.15 மணிக்கு பாளை. ஜவகர் மைதானத்திலும், இரவு 9 மணிக்கு மேலப்பாளையம் பஜார் திடலிலும் பாளை. தொகுதி மதிமுக ேவட்பாளர் நிஜாமை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  தினகரன்,com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக