செவ்வாய், 19 ஏப்ரல், 2016

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் முதல் கட்டமாக 33 தொகுதிகள்..

சென்னை: திமுக கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் தற்போதைய உறுப்பினர்கள் விஜயதாரணி, பிரின்ஸ், கோபிநாத் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதல்கட்டமாக 33 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தில்லியில் இன்று வெளியிடப்பட்டது.
அதன்படி தற்போதைய காங்கிரஸ் உறுப்பினர்கள் விஜயதாரணி (விளவங்கோடு), ஜெ.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), கே.கோபிநாத் (ஓசூர்) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் விவரம்:
திருத்தணி- ஏ.ஜி.சிதம்பரம், அம்பத்தூர்- ஹாஸன் மௌலானா, ராயபுரம்- ஆர்.மனோகர், சோளிங்கர்- ஏ.எம்.முனிரத்தினம், ஓசூர்- கே.கோபிநாத், கலசபாக்கம்- செங்கம் ஜி.குமார்.

ஆத்தூர் (தனி)- எஸ்.கே.அர்த்தநாரி, சங்கரி- டி.கே.ராஜேஸ்வரன், நாக்கமல்- டாக்டர் ஆர்.செழியன், தாராபுரம் (தனி)- வி.எஸ்.காளிமுத்து, கோபிச்செட்டிபாளையம்- எஸ்.வி.சரவணன், உதகமண்டலம்- ஆர்.கணேஷ்.
சூலூர்- வி.எம்.சி. மனோகரன், கோவை வடக்கு - மயூரியா எஸ்.ஜெயக்குமார், வேடசந்தூர்- ஆர். சிவசக்திவேல் கவுன்டர், கரூர்- கே.சுப்பிரமணியன், திருச்சி கிழக்கு- ஜி.ஜெரோம் ஆரோக்கியராஜ்.
முசிறி- எஸ்.விஜயா பாபு, ஜெயங்கொண்டம்- ஜி.ராஜேந்திரன், காட்டுமன்னார்கோயில் (தனி)- கே.ஐ.முனிரத்தினம், வேதாரண்யம்- பி.வி.ராஜேந்திரன், நன்னீலம்- எஸ்எம்பி துரைவேலன், பாபநாசம்- டி.ஆர்.லோகநாதன், பட்டுக்கோட்டை- கே.மகேந்திரன்.
அறந்தாங்கி- எஸ்.டி.ராமச்சந்திரன், காரைக்குடி- கே.ஆர்.ராமசாமி, மதுரை வடக்கு- வி.கார்த்திகேயன், திருமங்கலம்- ஆர்.ஜெயராம், முதுகுளத்தூர்- எஸ்.பாண்டி, தென்காசி- பழனி நாடார், நான்குனேரி- ஹெச்.வசந்தகுமார், குளச்சல்- ஜெ.ஜி.பிரின்ஸ், விளவங்கோடு- விஜயதாரணி.  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக