சனி, 2 ஏப்ரல், 2016

ம.ந,கூட்டணி தலைவர்களை ஏப்ரில் பூல் ஆக்கிய வி.சு.பி....அந்த 70 தொகுதிகளையும் தரமாட்டமே?

(வி.சு.பி= விஜயகாந்த், சுதீஷ், பிரேமா)  சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன், விஜயகாந்தின் தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளது. தே.மு.தி.க., 124 தொகுதிகளிலும், ம.ந.கூ., 110 தொகுதிகளிலும் போட்டியிடுவது என, தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தலைமையில், திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர், நேற்று பகல், 12:00 மணியளவில், சென்னை கோயம்பேட்டில் உள்ள, தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு விஜயகாந்துடன் தொகுதி பங்கீடு பேச்சை நடத்தியுள்ளனர். இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறியதாவது:
மக்கள் நலக்கூட்டணி போட்டியிட விரும்பும், 110 தொகுதிகளின் பட்டியலை விஜயகாந்திடம், அதன் தலைவர்கள் கொடுத்தனர். அந்த பட்டியலை பார்த்த விஜயகாந்த்,அதை சுதீஷிடம் ஒப்படைத்தார். அதைப் பெற்ற சுதீஷ், தன் அறைக்கு சென்றார். ஐந்து நிமிடங்களுக்கு பின், மீண்டும் விஜயகாந்த் அறைக்கு வந்த அவர், ம.ந.கூ., தலைவர்கள் கேட்கும் தொகுதிகளில், 70 தொகுதிகள், தே.மு.தி.க., போட்டியிட உள்ள தொகுதிகள் என, கூறியுள்ளார்.  பேய்க்கு வாழ்க்கை பட்டால் பிணம் தின்னி தொழில்தான் வாய்க்கும்....அய்யா நல்லகண்ணு அவர்கள் பிறேமலதாவிடம் பேச்சு கப்டனிடம் குட்டு எல்லாம் வாங்கவேண்டி வருமோ?
உடன், விஜயகாந்த், இதில், 10 தொகுதிகளை வேண்டுமானால் விட்டுக் கொடுக்கிறேன். அதுவும், தென்மாவட்ட தொகுதிகளாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டதும், ம.ந.கூ.,தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பட்டியலில் உள்ள, 30 வட மாவட்ட தொகுதிகளை, தே.மு.தி.க., விட்டுக் கொடுத்தே தீர வேண்டும் என்று, கூறியுள்ளனர். அதற்கு கட்சியினரிடம் ஆலோசித்த பின், முடிவை சொல்வதாகக் விஜயகாந்த் கூறியுள்ளார். இதற்கிடையில், கோயம்பேட்டில் உள்ள பிரபல ஓட்டலில் இருந்து, ம.ந.கூ., தலைவர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்களுக்கு, மதிய உணவு வரவழைக்கப்பட்டிருந்தது. அதை சாப்பிடும்படி தெரிவித்துள்ளனர்.அதை ஏற்க மறுத்த தலைவர்கள், அங்கிருந்து வேக வேகமாக வெளியேறி, நேராக, அண்ணாநகரில் உள்ள வைகோவின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டுள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
-- நமது சிறப்பு நிருபர் --தினமலர்.கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக