செவ்வாய், 5 ஏப்ரல், 2016

திமிங்கிலம் விழுங்கிய மனிதர்...வயிற்றுக்குள் 3 வது நாள்...உயிரோடு மீண்டார் 56-year-old Luigi Marquez

56-year-old Luigi Marquez lived to tell the fascinating tale of his survival, as he came alive after spending 3 days inside a giant whale.
ஸ்பெயி்ன் நாட்டைச் சேர்ந்த மீனவர் லுயுகி மார்கியூஸ்(56). இவர் கடந்த சில நாட்களுக்கு 3முன்பு மீன் பிடிக்க சென்று, மோசமான வானிலை காரணமாக மாயமானார்.இவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், கடற்கரை பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர் புயலில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.ஆனால், அவர் தற்போது உயிரோடு திரும்பி வந்துள்ளார். ஒரு திமிங்கிலத்தின் கழிவில் இருந்து மயங்கிய நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளர்.  அனைவரும் ஆச்சர்யப்படும் விதமாக, ஒரு திமிங்கிலம் வயிற்றுக்குள் மூன்று நாட்கள் இருந்ததாகவும், அதன்பின் அந்த திமிங்கிலத்தின் கழிவு வழியாக வெளி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பற்றி அவர் கூறியபோது “ மீன் பிடிக்க கடலுக்கு சென்ற போது, ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக நான் கடலில் விழுந்தேன். அப்போது என்னை ஒரு ராட்சத திமிங்கிலம் முழுங்கி விட்டது. ஆனால் இறக்கவில்லை. அதன் வயிற்றில் உயிரோடு இருந்தேன். அதன் வயிற்றுப் பகுதி குளிராகவும், இருட்டாகவும் இருந்தது.எனது வாட்டர் புரூப் கடிகாரத்தில் உள்ள ஒளியின் உதவியில் திமிங்கிலத்தின் வயிற்றுக்குள் இருந்த கழிவுகளைத்தான் சாப்பிட்டேன். அதன் வயிற்றுக்குள் இருந்த செரிக்காத உணவுகளின் துர்நாற்றத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனாலும் வேறு வழியின்றி இருந்தேன். எப்படியும் உயிர் பிழைப்பேன் என்று நம்பியிருந்தேன். அப்படியே நடந்து விட்டது. மூன்று நாட்கள் குளித்தால்தான் என் மீது உள்ள துர்நாற்றம் போகும்” என்று அவர் தெரிவித்துள்ளார். வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக