ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

டாஸ்மாக் கலைக்கப்படும்... திமுக தேர்தல் அறிக்கை - 25 சிறப்பு அம்சங்கள்...சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் நிதி

2016 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கலைஞர் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அதனை கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார். திமுக தேர்தல் அறிக்கை 72 பக்கங்கள் கொண்டதாக உள்ளது. 6 மாதங்களாக தேர்தல் அறிக்கை குழு பணியாற்றி இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
 1. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் உருவாக்கப்படும்
 2. டாஸ்மாக் நிறுவனம் கலைகப்பட்டு அதில் பணியாற்றுவோருக்கு மாற்றுப்பணி வழங்கப்படும்.
3. மது அடிமைகளுக்கு சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.
 4. விவசாயிகளுக்கு கடன்கள் முழுக்க தள்ளுபடி
 5. மகளிருக்கு 9 மாதகால காலம் பேறுகால விடுமுறை அளிக்கப்படும்
 6. மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு திட்டம் கொண்டுவரப்படும்
 7. அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்
 8. வெள்ள சேதங்களை தடுக்க 5 ஆயிரம் கோடியில் திட்டம்
 9. தமிழகம் முழுவதும் அறிஞர் அண்ணா உணவகங்கள் அமைக்கப்படும்
10. அனைத்து நாட்களிலும் ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை
11. மத்திய அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழியாக தமிழ் இடம்பெற நடவடிக்கை

 12. ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படும்
 13. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.7 வரை குறைக்கப்படும்
 14. 3 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்
15. விசைத்தறிக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்
 16. கரும்புக்கு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு 3,500 வழங்கப்படும்
 17. சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் நிதி வழங்கப்படும்
18. மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு சட்டம் கொண்டுவரப்படும்
 19. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை
20. மீனவர்களுக்கு 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்
 21. தமிழகம் முழுவதும் முதியோருக்கு கட்டணமில்லா பயணச்சலுகை
 22. சென்னை முதல் ஓசூர் வரை நெடுஞ்சாலை தொழிற்சாலைகள் திட்டம்
 23. மாதம் ஒருமுறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்
24. மீனவர் சமுதாயத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை 25. 10 ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் உள்ள ஏரிகள் தூர் வாரப்படும் nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக