திங்கள், 4 ஏப்ரல், 2016

அதிமுக 227 தொகுதிகளில் போட்டி,கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளில்,

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அஇதிஅமுக தலைமையிலான கூட்டணி வெளியிட்டுள்ளது.இதன்படி அஇஅதிமுக மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 227லும் கூட்டணிக் கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
கட்சித் தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீண்டும் ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அதிமுக சார்பில் பல அமைச்சர்களுகு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
போடியில் ஓ பன்னீர்செல்வம், ஆலந்தூரில் பன்ருட்டி ராமச்சந்திரன், ஆத்தூர் தொகுதியில் விஸ்வநாதன், மைலாபூரில் தமிழக காவல்துறையின் முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் போன்றோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தேதிமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவில் இணைந்தவர்களில் பாண்டியராஜனுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சரத்குமர் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இத்தேர்தலில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது.tamil,bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக