சனி, 9 ஏப்ரல், 2016

அதிமுக.....திமுக...நேரடிப்போட்டி...176 தொகுதிகளில்

சென்னை,ஏப்.09 (டி.என்.எஸ்) காங்கிரஸ் - திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஒருவழியாக முடிவடைந்துவிட்ட நிலையில், திமுக 176 தொகுதிகளில் போட்டியிடப் போகிறது.
திமுக-வுடன் கூட்டணி சேர்ந்துள்ள காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதோடு, அவை எந்த எந்த தொகுதிகள் என்ற விபரமும் அறிவிக்கப்பட்டு விட்டது.
மேலும், திமுக கூட்டணியில் ஈடுபட்டுள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு–5, முஸ்லிம் லீக் கட்சிக்கு–5, புதிய தமிழகம் கட்சிக்கு–4, பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவ படை, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

என்.ஆர். தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, சிவகாமியின் சமூக சமத்துவப்படை, பொன்.குமாரின் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகிய 3 கட்சிகளுக்கு மட்டும் இன்னமும் போட்டியிடும் தொகுதி விவரம் அறிவிக்கப்படவில்லை. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருக்கும் இவர்கள் மூவருக்கும் ஓரிரு நாட்களில் போட்டியிடும் தொகுதி அறிவிக்கப்பட்டுவிடும்.
58 தொகுதிகள் போக மீதமுள்ள 176 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
திமுக போட்டியிடும் 176 தொகுதிகளும், அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை தேர்வு செய்துள்ளது. அதன்படி, அதிமுக-வுடன் திமுக நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளது chennaionline.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக