புதன், 6 ஏப்ரல், 2016

ஜெ.வால் உருவானது ம.ந.கூ.: 1500 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது: சந்திரகுமார்

தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையிலான அணியினர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சந்திரகுமார் பதில் அளித்தார்.

கேள்வி: ஊழல் இல்லாத மக்கள் நலக் கூட்டணியிடம் சேர்ந்தால் என்ன?

பதில்: ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று யார் சொன்னார்கள். இந்த கூட்டணி உருவாக காரணமானவர் ஜெயலலிதா. இது அதிமுகவின் பி டீம். இதற்கு மிகப் பெரிய ஒரு தொகை, தொகையை சொல்ல விரும்பவில்லை. வைகோ மூலமாக எல்லாருக்கும் கொடுக்கப்பட்டிருப்பதாக குற்றம் சொல்கிறார்கள். பட்டிதொட்டியெல்லாம் போய் கேளுங்கள். அப்படி இருக்கும்போது அந்த கூட்டணியில் இருக்கிற வைகோ மற்றவர்கள் மீது இல்லை என்பதை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். 

கேள்வி: நீங்கள் கூட 3 கோடி ரூபாய் வாங்கியதாக சொல்கிறார்களே.

பதில்: அதற்குத்தான் சொன்னேன். வைகோ 1500 கோடி வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதிமுகவுக்கு புரோக்கரா செயல்படுவதாக சொல்கிறார்கள். வைகோ உண்மை என்று சொன்னால், சந்திரகுமார் மீது வைகோ சொன்ன குற்றச்சாட்டை ஏற்கிறேன். 

கேள்வி: கட்சிதான் முக்கியம், தலைவர்தான் முக்கியம் என்று சொல்கிறீர்கள். தலைவர் எந்த வழி போகிறாரோ, அந்த வழியில்தானே செல்ல வேண்டும்.

பதில்: ஆமாம். தலைவர் சொன்னதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுதான் மரபு. ஆனால் தொண்டர்கள் எந்த கருத்தை சொல்கிறார்களோ. அந்த முடிவை தலைவர் எடுக்க வேண்டும். 

படம்: அசோக்  nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக