வியாழன், 31 மார்ச், 2016

Vasalgel ஆணுறைக்கு பதிலாக ஒரே ஊசி ஒரு வருடம் தாக்கு பிடிக்குமாம் !

Condom Free Sex May Now Be A Possibility With Just One Shot Of This New Injection
மேம்படுத்தப்பட்ட கருத்தடை சாதனங்களை உருவாக்குவது பற்றிய ஆராய்ச்சியை, அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ரொனால்ட் தலைமையிலான  விஞ்ஞானிகள் குழு மேற்கொண்டு வருகின்றனர். இறுதியில், புதிய வகை கருத்தடை மருந்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்டீரின் அல்மாலிக் ஆசிட்டால் உருவாக்கப்பட்ட அந்த மருந்து சிறந்த கருத்தடை மருந்தாக செயல்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தை பயன்படுத்தும்போது இனப்பெருக்க ஹார்மோன்களில்  மாற்றம் ஏற்பட்டு, ஆண் விந்தில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகி விடுமாம்.
இந்த ஊசியை உடலில் செலுத்திக் கொண்டால், ஒரு வருடத்திற்கு அதன் சக்தி இருக்குமாம். அதனால், ஆண் உயிரணுவால் கருத்தரிக்க செய்ய முடியாது.தற்போது குழந்தை பிறப்பை தள்ளிப்போட, ஆணுறை மற்றும் சில கருத்தடை சாதனங்களை ஆண்களும்,பெண்களும் உபயோகிக்கின்றனர். இந்த ஊசி வந்து விட்டால் அவை எதுவும் தேவையில்லை.>இந்த ஊசியை முதலில் முயல்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில், மருத்துவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக பலன் கிடைத்துள்ளது. இந்த மருந்தை மனிதர்களுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக, சில ஆய்வுகளை செய்த பிறகு இந்த மருந்து பயன்பாட்டிற்கு வரும் என பேராசிரியர் ரொனால்ட் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக