வியாழன், 3 மார்ச், 2016

விஜயகாந்த்:கூட்டணி வதந்திகளை நம்பவேண்டாம்!

தினமணி.com :தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளது என்று வரும் செய்திகள் வதந்தியே என அதன் தலைவர் விஜயகாந்த் கூறினார். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் இன்று மாலை நடைபெற்ற விழாவில், ரூ.1.77 கோடி மதிப்பிலான பணிகளை தொடக்கிவைத்து விஜயகாந்த் பேசியதாவது" தேசிய முற்போக்கு திராவிட கழகம் திமுகவுடன் கூட்டணி ஏற்படுத்தியுள்ளது என்று வரும் செய்திகள் வதந்தியாகும். கூட்டணி குறித்து பகிரங்கமாகவே அறிவிக்கப்படும். கூட்டணிக்காக எவ்வித பேரத்திலும் ஈடுபடவில்லை. நான் பணத்துக்கும் புகழுக்கும் ஆசைப்படவில்லை. அதை இரண்டையும் நான் ஏற்கெனவே சம்பாதித்துவிட்டேன் என்றார் விஜயகாந்த்....சூட்கேஸ் போதாதோ? பணம் அதிகம் சம்பாதித்தவனுக்கு தான் பணத்தில் ஆசை அதிகம் என்பது உலகத்துக்கே தெரியும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக