வெள்ளி, 25 மார்ச், 2016

வைகோ சகாக்களுக்கும் தெரியாமல் ரகசியமாக....விலை பேசினார் / போனார்?


வைகோ பதில் தரட்டும். மநகூ பெயரை விஜயகாந்த் அணி என்று அழைக்க ரகசியமாக எண்ணியிருந்தார் வைகோ என்று குற்றம் சாட்டுகிறேன். மநகூ பிரசாரங்களில் இதுவரை காணப்படாமல் இருந்து இப்போது திடீர் உதயம் ஆகி முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை ஆக்கியிருப்பது ஒரு ரகசிய திட்டம். அதை தனது சகாக்களுக்கும் தெரியாமல் ரகசியமாக மனதில் எண்ணியிருந்தார் வைகோ என்று குற்றம் சாட்டுகிறேன். 124 தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுப்பது தனது சகாக்களுக்கு குறைத்து கொள்வது என்பது ஒரு ரகசிய திட்டம். அதை ரகசியமாக எண்ணி இருந்தவர் வைகோ என்று குற்றம் சாட்டுகிறேன். தொடையில் பிறந்த பீமன் முக்கியமானவன். அந்த பீமன் திருமாவளவன் என்று வருணித்து சூத்திரப்பட்டத்தை சாதூர்யமாக திருமாவுக்கு சூட்டியிருக்கிறார்கள்.
இப்படி அவரை வருணிப்பதற்குத்தான் திருமாவை அந்த வரிசையில் அந்தவகையில் உட்கார வைத்து இருந்து இருக்கிறார்கள். அதை முன்பே அறிவார் வைகோ என்று குற்றம் சாட்டுகிறேன்.


விஜயகாந்த் உடன்வந்தால் வெற்றி வாய்ப்பு கூடும் என்று திமுக நினைத்து இருந்திருக்கலாம். ஆனால் 80 தொகுதி 500 கோடி பணம் திமுக தேமுதிக வுக்கு தரத்தயாராக இருந்தது என்று வைகோ குற்றம் கூறுவதற்க்கு காரணம் தனது ரகசிய திட்டம் வெளியே தெரியாமல் இருப்பதற்கான ஒரு ரகசிய அனுகுமுறை. உண்மையில் என்ன நடந்து இருக்கும் என்றால் தனக்கு விஜயகாந்த் 50கோடி தருவதாக இருந்தால் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தை அறிவிப்பதோடு மநகூவைவிட கூடுதல் தொகுதி தேமுதிக வுக்கு கிடைக்க முயல்வதாக விஜயகாந்துக்கு ரகசியமாக வாக்கு கொடுத்து இருந்து இருக்கிறார் வைகோ. கேட்டப்படி கிடைத்ததும் சொன்ன படி நடந்து கொண்டார். இதை தனது சகாக்கள் அறியாவன்னம் வைத்துக்கொண்டார் வைகோ என்று குற்றம் சாட்டுகிறேன்.

விஜயகாந்தை வைகோ அதனால் தான் கண்ணுமண்ணு தெரியாமல் புகழ்கிறார்.

நீங்க மநகூ என்பீங்க அப்புறம் விஜயகாந்த் அணின்பீங்க நாங்க ஆகா ஓகோ என்று உங்கள நெனைக்கனுமா வைகோ அவர்களே?

உங்களிடம் கம்மியா இருக்கு விஜயகாந்திடம் அதிகமா இருக்கு. நான் பணத்தை சொன்னேன். அதை இப்படி கூட்டு வைத்து கறைக்கலாம். வைகோ அவர்களே சூப்பர்.

குறிப்பு:- தான் எந்தவித பேரத்திலும் ஈடுபடவில்லை என்றார் விஜயகாந்த். அவருக்கு திமுக இவ்வளவு பணம் தர முன்வந்தது என்று பிரமாதமாக பேசி விஜயகாந்த் பேரம் நடத்தி இருந்து இருக்கலாம் என்கிற ஐயத்தை ஏற்படுத்திவிட்டார் வைகோ.

வைகோ அவர்களே நீங்க நல்லவரா கெட்டவரா? PICHALINGAM RAJENDRAN  subavee.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக