புதிய தமிழகம் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
சென்னையில் வியாழக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-;தேமுதிகவும், மக்கள் நலக் கூட்டணியும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, தொகுதிகளைப் பகிர்ந்துகொள்வோம். கூட்டணியில் சேர தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் பதில் சொல்வதாகக் கூறியுள்ளார். தேமுதிக தலைமையுடன் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியும், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவர் பாரிவேந்தரும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்
.புதிய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களோடு பேசினால், கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்தும், தேமுதிகவோடு பேசினால் அந்தக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இருந்தும் பிரித்துகொடுப்போம். இதுதொடர்பாக ஏற்கெனவே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவுக்கு ஆதரவாக மக்கள் நலக் கூட்டணி செயல்படுவதாக இருந்தால், விஜயகாந்த் எப்படி சேருவார். இதில் இருந்தே பொய்யான குற்றச்சாட்டுகள் என்பதை அறியலாம் என்றார் அவர் தினமணி.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக