திருமலங்கலம் உச்சம்பட்டி ஈழ அகதி ரவியின் தற்கொலைக்குக் காரணமாக இருந்த வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரனை கைது செய்! ரவிச்சந்திரனின் குடும்பத்துக்கு ரூ10 லட்சம் நிவாரணம் வழங்கிடுக!! என்று தமிழக வாழ்வுரிகை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘’மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உச்சம்பட்டி முகாமில் 500க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் வசித்து வருகின்றன இங்கு அகதிகளை கணக்கெடுப்பதற்காக இன்று ராஜேந்திரன் என்ற வருவாய்த்துறை அதிகாரி சென்றிருக்கிறார்.
அப்போது ரவிச்சந்திரன் மற்றும் அவரது மகன் மட்டும் முகாமில் இல்லாதது தெரியவந்துள்ளது பின்னர் வந்த ரவிச்சந்திரன் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்ததாக கூறியிருக்கிறார்.
ஆனால் இதனை ஏற்காத வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரன், ரவிச்சந்திரனை தகாத வார்த்தைகளால் வசைபாடியுள்ளார். இதில் மனமுடைந்த ரவிச்சந்திரன் அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பத்தில் ஏறி மின்சாரம் தாக்கி தற்கொலை செய்துள்ளார்
ஈழத் தமிழர் ரவிச்சந்திரனின் மரணத்துக்கு காரணமான வருவாய்த்துறை அதிகாரி ராஜேந்திரன் மீது உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும் ரவிச்சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை வேண்டி கேட்டுக் கொள்கிறேன். மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் தமிழகத்தின் எந்த அகதிகள் முகாமிலும் நடைபெறாவண்ணம் தமிழக அரசு உரிய நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்’ nakkheeran,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக