செவ்வாய், 8 மார்ச், 2016

தேமுதிக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை...டெல்லியில் முகாமிட்டுள்ள சுதீஷ் , பிரேமலதா..

புதுடெல்லி, தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தே.மு.தி.க.வுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டதா? என்பதற்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்தார்.கூட்டணி பேச்சு? தே.மு.தி.க. சார்பில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரமேலதா மற்றும் தே.மு.தி.க. இளைஞர் அணித்தலைவர் சுதீஷ் ஆகியோர் டெல்லியில் நேற்று முகாமிட்டிருப்பதாகவும், மாலையில் அவர்கள் பாரதீய ஜனதாவின் தேசிய தலைவர் அமித் ஷா மற்றும் பா.ஜனதாவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருடன் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தப்போவதாகவும் தகவல்கள் வெளியாயின. பரபரப்பான இந்த கூட்டம் குறித்த செய்தியை சேகரிக்க டெல்லியில் செய்தியாளர்கள் பலரும் ஆர்வத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.  காற்று உள்ளபோதே நெல்லை  தூற்றி கொள்ள வேண்டும்.. ..டிமாண்ட் உள்ளபோதே வசூலை அள்ளி குவிக்க வேண்டும்....

செய்தியாளர்கள் விசாரிப்பு டெல்லியில் உள்ள தமிழ் செய்தியாளர்கள் சுதீஷ் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தனர். அந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்ட செய்தியாளர்கள் பலரிடமும் சுதீஷ் உதவியாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர், ‘சுதீஷ் டெல்லியில் இருப்பதாகவும், முக்கியமான கூட்டம் ஒன்றில் அவர் இருப்பதாகவும்’ கூறியுள்ளார்.
என்ன கூட்டம் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘தற்போது வியாபார நிமித்தமான கூட்டம் நடைபெறுவதாகவும், மாலையில் சுதீஷ் தலைவர்களை சந்திப்பார் எனவும், அது குறித்த விவரங்கள் செய்தியாளர்களிடம் பிறகு அறிவிக்கப்படும்’’ என்றும் கூறியிருக்கிறார்.
இணைக்க முயற்சி இதற்கிடையில் நேற்று மதியம் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் டெல்லியில் தே.மு.தி.க.வுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருப்பதாக வெளியான தகவல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் கூறியதாவது:–
தே.மு.தி.க.வுடன் டெல்லியில் அப்படி சந்திப்பு எதுவும் நடத்த திட்டமிடப்படவில்லை. வதந்தியின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்ற கட்சிகள் பாரதீய ஜனதா கட்சியுடன் உள்ளன. மேலும் புதிய கட்சிகளை கூட்டணியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகம் செல்வேன் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்ததும் தமிழகம் செல்வேன். அங்கு கூட்டணி பற்றி மேலும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தே.மு.தி.க.வுடனான கூட்டணி குறித்து ஜவடேகர் உறுதியாக எதுவும் கூறவில்லை.
மதியம் டெல்லியைச் சேர்ந்த செய்தியாளர்கள் சென்னையில் பல இடங்களில் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ‘அந்த நேரத்தில் சுதீஷ் தே.மு.தி.க.வின் கோயம்பேடு அலுவலகத்தில் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் இருந்ததாக’ கூறப்பட்டது. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக