செவ்வாய், 22 மார்ச், 2016

ஆசிரியை கோதை லட்சுமிக்கு நீதி கிடைக்கவில்லை....இருட்டறை சட்டத்தால் தப்பிவிட்டான் சிவசுப்ரமணியன்

சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்!
1464641_1234220469939352_5651842948863647735_nvadhini.com: 16 வயதிலேயே 25 வயது இளைஞன் மாதிரி மீசை தாடி முளைத்திருக்கிறது இந்த பையனுக்கு வயதுக்கு மீறிய வளர்ச்சியிலேயே தெரிகிறது இவன் எந்த அளவிற்கு முதிர்ச்சியான எண்ணம் கொண்டவன் என்று! ஆசிரியராக இருந்தாலும் வெளியுலகம் தெரியாத கிராமத்து பெண்தான் இந்த கோதை லட்சுமி என்கிற 22வயது இளம் பெண்…
தன் காம பசிக்கு இந்த பெண்ணை தன் காதல்வலையில் வீழ்த்தி இந்த பையன்தான் கூட்டிக்கொண்டு ஓடியிருக்கிறான்..
அந்த பெண்ணை ஒரு வருடம் அனுபவித்து குடும்பம் நடத்திவிட்டு இப்போது அவள் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் இவன் ஒன்னும் தெரியாத பையன் போல் பெற்றோர்களிடம் திரும்பிவிட்டான் .சிறுவர் சீர்திருத்த சட்டம்  சிறுபிள்ளை தனமாக இருக்கிறது....மைனர் கிருமினல்கள் எல்லாருக்குமே சட்டம் தங்களை பாதுகாக்கும் என்ற தைரியத்தில் குற்றம் செய்கிறார்கள்...அவனால் அது முடியும் என்றால் அவனும் பெரியவனே.  

பழத்தை ருசித்துவிட்டு சக்கையை துப்பிவிட்டதால் இப்போது அந்த பெண்ணோடு இருந்த நாட்கள் கசப்பான இருக்கிறதாம் இவனுக்கு .
சட்டமும் இவனுக்கு சாதகமாக இவனை சிறுவன் என்று மன்னித்து விட்டு இவனால் கர்ப்பமான அந்த பெண்ணை மட்டும் குற்றவாளியாக சித்தரிப்பது அநியாயம் .. இது அதர்மம் ..
இதே இது கோதைலட்சுமி 16வயது பெண்ணாக இருந்திருந்து இதே போல் இந்த மீசை தாடி முளைத்த சிறுவன் செய்திருந்தால் அப்போதும் சட்டப்படி இவனை மைனர் என்று மன்னித்து அந்த பையனை பெற்றோரோடு திருப்பி அனுப்பி விடுமா ?
இப்படி மைனர்கள் செய்யும் தவறுக்கு எல்லாம் அவர்களை சட்டப்படி விட்டுவிட்டால் அந்த மைனர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத்தான் என்ன விடை?
டில்லியில் மூன்று வருடத்திற்கு முன்பு ஒரு பெண்ணை கற்பழித்து கொடூரமாக கொலை செய்தவனும் இவனை போல ஒரு மைனர்தான், அவனையும் சட்டம் மன்னித்து விட்டது ..
மன்னிப்பு என்கிற பெயரில் நமது நாட்டின் சட்டம் இவனை போல பல இளம் குற்றவாளிகளை உற்பத்தி செய்கிறது .
இப்போது முதலில் மரண தண்டனை வழங்கப்பட வேண்டியது நம் நாட்டின் சட்டதிற்க்குத்தான்.
இது ஒரு இந்திய குடிமகனின் கொந்தளிப்பு … தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற இயலாமையின் வெளிப்பாடு .
சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
தீர்ப்புகள் திருத்தப்பட வேண்டும்.
இந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். அந்த பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு அந்த பைய்யன்தான் தகப்பன்…
குழந்தை கொடுக்க தெரிந்த அந்த பையனுக்கு அந்த பெண்ணோடு குடும்பம் நடத்த தெரியாதா ?
அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவேண்டும் ..
அந்த பெண்ணோடுதான் அந்த பையன் வாழவேண்டும் ..
நான் சொல்வது சரியா தவறா ?
உமா சதீஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக