புதன், 16 மார்ச், 2016

விஜய மல்லியா: என்றாவது ஒருநாள் நான் வருவேன்.....



புதுடில்லி: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிரான ஒரேநாளில் ஜாமினில் வெளிவர முடியாத 5 கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வாரன்ட் நிலுவையில் இருப்பதுடன் இன்றுடன் 6 வாரன்ட் உத்தரவை போலீசார் நிறைவேற்ற தயாராகி வருகின்றனர். வங்கியில் கடன் வாங்கி ஏறக்குறைய 9 ஆயிரம் கோடிக்கு மேல் பாக்கி வைத்த குற்றத்திற்காக விஜய் மல்லையா மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதற்கிடையில் மல்லையா தலைமறைவானதாக கூறப்படுகிறது. நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. இந்திய சட்டத்தை மதித்து கீழ் படித்து நடப்பேன். மீடியாக்கள் தான் என்னை அவமானப்படுத்துகின்றன, என்றாவது ஒரு நாள் நான் வருவேன் என்று டுவிட்டரில் பதிவு வெளியிட்டார்.மொத்தமா முழுங்கிட்டு இப்ப நானே வருவேன் இங்கும் அங்கும் யார் என்று யார் என்று இப்ப பாட்டு வேற.... 
மல்லையா விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் பார்லி.,யில் குரல் எழுப்பியுள்ளது. இந்நிலையில் இவர் மீது பல்வேறு செக் மோசடி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மல்லையாவை கைது செய்து வரும் 29ம் தேதிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் எனஐதராபாத்தில் உள்ள எர்ணாமன்சில் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. செக் மோசடி வழக்கு என்பதால் மல்லையாவை போலீசார் கைது செய்ய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. பெரும் புள்ளியான மல்லையா இந்த சிக்கலில் எப்படி வெளியே வருவார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக