புதன், 16 மார்ச், 2016

17வயது கணவன் Free ஆனால் 23வயது மனைவி சிறையில்....சட்டம் கொடுமை

ஆசிரியையுடன் ஓடிய மாணவன் தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள காலாங்கரையை சேர்ந்த ஆசிரியை கோதைலெட்சுமி (வயது23). தென்காசி அருகே உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேலை பார்த்தபோது அங்கு 10–ம் வகுப்பு படித்து வந்த கடையநல்லூர் கிருஷ்ணா புரத்தை சேர்ந்த மாணவன் சிவசுப்பிரமணியன் என்பவருடன் கடந்த ஆண்டு மார்ச் 31–ந்தேதி மாயமானார். இந்த சம்பவம் குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதற்கிடையில் மகனை கண்டுபிடித்து தருமாறு சிவ சுப்பிரமணியனின் தாயார் மாரியம்மாள் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.வெள்ளைக்காரனின் சட்டத்தை காவிக்கொண்டு இருக்காமல் கொஞ்சம் சுயமாகவும் சிந்தித்து இந்த பெண்ணை விடுதலை செய்யவேண்டும் அது மட்டும் அல்ல அவருக்கு சமுகத்தால் ஏதும் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கவும் வேண்டும.

இந்த சூழலில் மாயமான கோதைலட்சுமியும், சிவசுப்பிரமணியனும் புதுச்சேரி சென்று திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவல் அறிந்த புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமை யிலான போலீசார் கடந்த 10–ந்தேதி அங்கு சென்று கோதைலட்சுமி, சிவசுப்பிர மணியனை புளியங்குடிக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள் இருவருக்கும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் தென்காசி நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ்வரி முன்னிலையில் அவர்களை போலீசார் ஆஜர்படுத்தினர். ஆசிரியை கோதை லெட்சுமியை 15 நாள் சிறை காவலில் வைக்கவும், மாணவன் சிவ சுப்பிரமணியனை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 இதையடுத்து கோதைலெட்சுமி நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். சிவசுப்பிரமணியன் நெல்லை கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டான். இந்த நிலையில் கோதை லெட்சுமி 4 மாத கர்ப்பமாக உள்ளதால் அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்க கொக்கிரகுளம் மகளிர் சிறையில் வசதிகள் இல்லாததால் திருச்சியில் உள்ள மகளிர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார்.

 மாணவன் சிவசுப்பிரமணியனை கண்டுபிடித்து தரும்படி அவனது தாய் கொடுத்த ஆட்கொணர்வு மனுவின் அடிப்படையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதுரை ஐகோர்ட்டு கிளையில் சிவசுப்பி ரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான். அவனை புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் அழைத்து வந்தனர். மாணவன் சிவசுப்பிரமணியன் தாடி வைத்திருந்த நிலையில், பிரவுன் கலர் ஜீன்ஸ், சிவப்பு கலர் டீ–சர்ட் அணிந்து வந்திருந்தான். கண்களில் கண்ணாடியும் அணிந்திருந்தான். நீதிபதிகள் செல்வம், சொக்கலிங்கம் முன்பு மாணவன் சிவசுப்பிரமணியன் ஆஜர்படுத்தப்பட்டான்.

மாரியம்மாள் தரப்பில் வக்கீல் சுபாஷ்பாபு ஆஜரானார். நீதிபதிகள், எங்கு சென்றிருந்தீர்கள் என கேட்டனர். அதற்கு திருப்பூர் சென்றதாக சிவசுப்பிரமணியன் கூறினான். உங்களது வயது என்ன? என்ற கேள்விக்கு 16 வயது 4 மாதம் என்றான். இதனை தொடர்ந்து நீங்கள் மைனர் என்பதால் எங்கு செல்ல விரும்புகிறீர்கள் என நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தாயுடன் செல்ல விரும்புவதாக சிவசுப்பிரமணியன் தெரிவித்தான். இதனை தொடர்ந்து அதற்கான உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன் பின்னர் தாய் மாரியம்மாளிடம் சிவசுப்பிரமணியன் ஒப்படைக்கப்பட்டான்.
அவனை கண்ணீர் மல்க தாய் மாரியம்மாள் அழைத்து சென்றார். இந்த வழக்கில் மாணவன் சிவசுப்பிரமணியன் தாயுடன் செல்வதாக கூறியது திடீர் திருப்பமாக அமைந்தது. ஆசிரியை கோதைலெட்சுமியையும் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த அவரது தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவரும் இன்று ஆஜர் படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக ஐகோர்ட்டு வளாகத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கோதைலெட்சுமி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை. இருப் பினும் ஆட்கொணர்வு மனு இருப்பதால் அவர் விரைவில் ஆஜர்படுத்தப்படுவார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக