புதன், 23 மார்ச், 2016

சரத்குமார் மீண்டும் அதிமுக கூட்டணியில்....அப்பாயின்ட் மென்ட் கிடைத்தது!

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை இன்று போயஸ்கார்டனில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடைபெற உள்ள தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். அப்போது ஏற்கனவே அந்த கூட்டணியில் இருந்து விலகி பாஜகவுடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சரத்குமார். கட்சியின் வளர்ச்சிக்காக அவ்வாறு யோசித்தோம்.

இருப்பினும் தற்போது அதிமுகவில் இணைந்து செயல்படுவதுதான் சரியான முடிவாக இருக்கும் என கட்சியின் சில முக்கிய தலைவர்கள் கூறியதையடுத்து முடிவை மாற்றிக்கொண்டுள்ளோம். இந்த தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபட உள்ளோம் என கூறினார்.
இதனிடையே அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை இன்று நேரில் சந்தித்த சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார், நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது தினமணி.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக