344 மருந்துப் பொருட்களை இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய
மத்திய அரசு அண்மையில் விதித்த தடையை நீக்க முடியாது என சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தென்னிந்திய மருந்து உற்பத்தி யாளர்
சங்கங்களின் கூட்ட மைப்பு தலைவர் சேதுராமன் தாக்கல் செய்த மனுவில்
கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் சுகாதாரத் துறை செயலாளர் கடந்த 10-ம் தேதி வெளியிட்ட ஒரு
அறிவிப்பாணையில் வலி நிவா ரணி, சளி, இருமலுக்கான மருந்துகள், நோய்
எதிர்ப்புக் கான மருந்துகள், குறிப்பிட்ட சில சர்க்கரை நோய் மருந்து கள்,
ஒன்றுக்கு மேற்பட்ட மூலக்கூறுகளை கொண்ட மருந்துகள் என 344 மருந்துப்
பொருட்களை இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடை விதித்து உத்தர
விட்டார்.
ஆனால் இவ்வாறு தடை விதிக்கப்பட்ட இந்த மருந்துப் பொருட்களை கடந்த 25 ஆண்டு
களுக்கு மேலாக இந்தியாவில் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறோம்.
பொது மக்களும் பயன்படுத்தி வரு கின்றனர். இதுவரை இந்த மருந்துப் பொருட்கள்
மீது எவ்வித புகாரும் வரவில்லை. இந்த மருந்துகள் தரம் குறைந்தவை என்ற
குற்றச்சாட்டும் எழவில்லை. இந்த மருந்துப் பொருட்கள் இந்தியாவில்
மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் விற்பனை
செய்யப்பட்டு வருகின்றன.
இந்த மருந்துகளுக்கு உலக சுகாதார அமைப்பும் அனுமதி மற்றும் அங்கீகாரம்
வழங்கி யுள்ளது. இந்நிலையில் இந்தியா வில் மட்டும் இந்த மருந்துப்
பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்ய தடை விதிப்பது தவறானது. இது
தொடர்பாக மத்திய அரசு தடை விதிக்கும் முன்பாக எங்களிடம் எவ்வித விளக்கமோ,
நோட்டீஸோ அனுப்பவில்லை. தன்னிச்சையாக இந்த 344 மருந்துப் பொருட்களை தடை
செய்தது தவறு.
எனவே மத்திய அரசு கடந்த 10-ம் தேதி பிறப்பித்த இந்த தடை உத்தரவுக்கு
இடைக்காலத் தடைவிதிக்க வேண்டும். அத்துடன் இந்த மருந்துப் பொருட்களை
உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நபர்கள் மீது அரசு எந்தவொரு
நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இவ்வாறு அதில் கோரி யிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி
எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு
வந்தது. மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், மத்திய அரசு
இந்த முடிவை ஒருதலைப்பட்சமாக எடுத்துள்ளது. எனவே மத்திய அரசு விதித்துள்ள
தடைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், என வாதிட்டார்.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் சு.சீனி
வாசன், ‘‘இந்த 344 மருந்துப் பொருட்களுக்கும் தடை விதிக்கும் முன்பாக
மத்திய அரசு, அனைத்து காரணங்களையும் நன்கு ஆராய்ந்து, ஆய்வு செய்து
எக்காரணம் கொண்டும் பொதுமக்களுக்கு தீங்கு நேர்ந்து விடக்கூடாது என்கிற
எண்ணத்தில்தான் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளது’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், இது பொதுமக்களின் நலன் சார்ந்த விஷயம்.
இதில் எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது. தற்போது மத்திய அரசால்
தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்களுக்கு பல் வேறு நாடுகளும் தடை
விதித்துள்ளன.
எனவே மத்திய அரசு விதித்துள்ள தடையை நீக்கவோ, இந்த விஷயத்தில் தலையிடவோ
நாங்கள் விரும்பவில்லை. இந்த உத்தரவில் இப்போது எந்த சமரசமும் செய்ய
முடியாது. இந்த விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள
உத்தரவில், எங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளது. ஆனால் அதேநேரம், தற்போது
இந்த வழக்கு விசாரணை முடியும் வரை மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்
அடிப்படையில் மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எவ்வித
நெருக்கடியும் கொடுக்கக் கூடாது. இது தொடர்பாக மத்திய அரசு 3 வாரங்களில்
பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 2-ம் தேதிக்கு
தள்ளிவைத்தனர். ://tamil.thehindu.com/ta
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக