திங்கள், 14 மார்ச், 2016

தினமலர்:தெறித்து ஓடிய விஜயகாந்த்...சிதறவிட்ட சில்வண்டுகள்

தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினை முன்னிறுத்தி, சமூக வலைதளங்களில் செயல்படும், அவரது நெருங்கிய நபர்களால் நடத்தப்படும், 'ஓ.எம்.ஜி., - ஒன் மேன் குருப்' என்ற குழு தான், தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமையாததற்கான காரணம் என கூறப்படுகிறது.
இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரங்கள் கூறியதாவது:தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைய, மூன்று மாதங்களாக தி.மு.க., சார்பில் பல்வேறு தரப்பினர் மூலம் பேச்சு நடந்தது. ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கூட்டணிக்காக பேச்சு நடத்தினர்.ஸ்டாலின் மருமகன் சபரி  இதில் தன்னை முன்னிலை படுத்த விரும்புகிறார். கட்சியில் தன் ஆதிக்கம் அதிகமாக இருக்க வேண்டும் என்றும் கருணாநிதிக்கு ஒரு மன சாட்சி முரசொலி மாறன் இருந்ததை போல் ஸ்டாலினுக்கு மனசாட்சியாக இருக்க வேண்டும் என்ற நப்பாசையில் இவ்வாறு செயல் பட்டு கூட்டணியை அமைக்க முடியாமல் இப்படி குளறுபடிகளுக்கு காரணமாய் இருந்து விட்டார்.ஆகவே அவர்களை ஒரு கட்டத்திற்கு மேல் கட்சியில் ஆதிக்கம் செலுத்த விடாமல் பார்த்து கொள்ள வேண்டிய பொறுப்பு ஸ்டாலினுக்கு இருந்திருக்க வேண்டும் .ஆட்சிக்கு முன்னாலேயே இப்படி என்றால் .ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் இவர்களின் ஆதிக்கம் எல்லை மீறி போய் என்பதற்கு இந்த நடவடிக்கைகளே சாட்சி Wake up before its too late?
ஒவ்வொருவரும் கூட்டணி தொடர்பாக பேசும்போது, விஜயகாந்த் விதவிதமாக நிபந்தனைகளை விதித்து வந்தார்.*தி.மு.க., - தே.மு.தி.க., சரி பாதி தொகுதிகளில் போட்டியிட வேண்டும்; யார் முதல்வர் என்பதை, தேர்தலுக்கு பின் முடிவு செய்து கொள்ளலாம். இப்படி முதல் கட்ட பேச்சில் விஜயகாந்த் நிபந்தனை விதித்துள்ளார். அதற்கு, தி.மு.க., சம்மதிக்கவில்லை.
*அடுத்தகட்ட பேச்சில், துணை முதல்வர் பதவியும், 90 'சீட்'களும் கேட்க, அதற்கும் தி.மு.க., தரப்பு ஒப்புக் கொள்ளவில்லை. *தி.மு.க., தரப்பில், குடும்ப உறுப்பினர் ஒருவர்; தே.மு.தி.க., தரப்பில் குடும்ப உறுப்பினர் ஒருவர் சந்தித்து பேசினர். இரு தரப்பிலும் இறங்கி வந்து, 59 'சீட்'கள் என பேசி முடித்தனர்; தே.மு.தி.க., குடும்ப உறுப்பினருக்கு, ராஜ்யசபா எம்.பி., பதவி தரவும் ஒப்புதல் தரப்பட்டது.
*தேர்தல் செலவு விவரங்களை பார்த்துக் கொள்ள இரு தொழிலதிபர்கள், தி.மு.க.,வுக்காக ஒப்புக் கொண்டனர். இந்த பேச்சில் பேசப்பட்ட விவரங்களை கடந்தும், அதிகம், 'எதிர்பார்த்து' அதற்காக, பா.ஜ., மற்றும் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை மாறி மாறி வரவழைத்து விஜயகாந்த் பேசினார். இதற்கு, தி.மு.க., தரப்பில் கடும் எதிர்ப்பு
தெரிவிக்கப்பட்டது.

'முதலில், பா.ஜ., மற்றும் மக்கள்நலக் கூட்டணி தலைவர்களை சந்திப்பதை நிறுத்துங்கள். கட்சி தொண்டர்கள், பொதுமக்களிடம் கூட்டணிக்கு பேரம் பேசுவது போன்ற தோற்றம் உருவாகிறது' எனக் கூறிய பின், விஜய காந்த் தரப்பினர் ஒப்புக் கொண்டனர்.தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு விவரத்தை, ரகசியமாக வைக்க வேண்டும் என, விஜயகாந்த் விரும்பினார். ஆனால், தொகுதி பங்கீடு எண்ணிக்கை, கூட்டணி உடன்பாடு குறித்து, தி.மு.க.,வின், 'ஒன் மேன் குரூப்'பில் உள்ள ஒருவர்ஆர்வக்கோளாறினால், 'வாட்ஸ் ஆப்'பில் வெளியிட்டு விட்டார்.'கூட்டணி முடிவாகி விட்டது, கோபாலபுரத்தில், கருணாநிதி - விஜய காந்த் சந்திப்பு நடக்க போகிறது' என்ற செய்தியை அனுப்பி வைத்தார். இதையடுத்து, 'விஜயகாந்த் தி.மு.க., நடத்திய பேரத்திற்கு படிந்து விட்டார்; தி.மு.க.,விடம் விலைபோய் விட்டார்; கட்சியை அடகு வைத்து விட்டார்' என்ற கண்டன கணைகள் விஜயகாந்த் மீது பாய்ந்தன. இந்த விமர்சனங்கள் தன், 'இமேஜ்' மீதான தாக்குதல் என விஜயகாந்த் கருதினார்.
அப்போது விஜயகாந்த் கூறியதாவது:என்னை, மத்திய அமைச்சர்கள் வீடு தேடி வந்து பார்க்கின்றனர்;பா.ஜ., தலைவர்கள் ஓடி ஓடி வருகின்றனர்; மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் என்னுடன் டிபன், காபி சாப்பிட்டு கூட்டணி குறித்து பேசுகின்றனர்; த.மா.கா, தலைவர் வாசன் தொடர்ந்து தொலைபேசியில் பேசி வருகிறார்.மூப்பனார் தான் என் குரு. ஒரு காலத்தில், அவரை சுற்றி, தி.மு.க., - அ.தி.மு.க, கூட்டணி அமைத்தது போல், இப்போது என்னை சுற்றி தான், தமிழக அரசியல் நடக்கிறது.ஆனால், தி.மு.க.,வில் < உள்ள சில, 'சில்வண்டு'கள், 'கூட்டணி பேச்சை முடித்து விட்டார்' என, வெளியே செய்தி சொல்வது எனக்கு அவமானமாக இருக்கிறது. அதேபோல், தொழிலதிபர்கள் என்னிடம் பேசிய தகவலை, சமூக வலைதளங்களுக்கு தெரிவிப்பதும் எனக்கு பிடிக்கவில்லை. கூட்டணி அமைப்பதற்கு முன்பே, இப்படி என்றால், நாளை கூட்டணி அமைந்து விட்டால், என் கட்சியை உண்டு இல்லை என ஆக்கி விடுவதில், தி.மு.க., தலைவர்கள் கில்லாடிகள். எனவே, தனித்து நின்று பலத்தை காட்டுவோம். 2021ல், தே.மு.தி.க., தலைமையில் ஆட்சி அமைக்கும் கூட்டணியை உருவாக்குவோம். இந்த தேர்தலில், இரண்டு திராவிட கட்சிகளில், ஒரு கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு, என் கட்சிக்கு லாபம் ஏற்படும். தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., ஆகிய கட்சிகளை தவிர, மற்ற அனைத்து கட்சிகளையும் என் தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதன்பிறகு, ஒரு முக்கிய கட்சி சார்பில், கல்வி அதிபர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பிரபல மருத்துவமனையின் டாக்டர் ஆகியோர் விஜயகாந்த் குடும்ப உறுப்பினர்களிடம் பேசினர். பின்னரே தனித்து போட்டி என்ற முடிவை, விஜயகாந்த் எடுத்துள்ளார். இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக