திங்கள், 14 மார்ச், 2016

''நீதித்துறை, தன் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது,....உச்ச நீதமன்ற நீதிபதி தாக்கூர்

அலகாபாத்:''நீதித்துறை, தன் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது,'' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தெரிவித்தார். ;உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் ஐகோர்ட்டில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது:
நீதித் துறையில், 'பார்' எனப்படும் வக்கீல்கள் சங்கம் தான் தாயைப் போன்றது. ஆனால், நீதிபதிகள் தயாராக இருந்தும், வழக்கறிஞர்கள் ஒத்துழைப்பு இல்லாததால், வழக்குகள் தேங்குகின்றன. நீதித்துறை மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. உள்ளே இருக்கும் சவால்களை சமாளிக்கும் வகையில்,நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் சுய கட்டுப்பாட்டுடன், சிறப்பாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.   அதை சரி செய்ய என்ன செய்தீர்கள் ஜட்ஜையா? ஒரு புல்லு., ஆணி.. ஏதாவது? டவாலி பராக் சொல்லி பெட்டி தூக்க, கொடி பறக்கும் காரில் அதிகார பவுசோடு மவுசாக வலம் வருகிறீர்கள் நீங்கள்..
புறா தூது விடும் காலத்தில் தான் ஒவ்வொரு வாய்தாவுக்கும் 10 நாள் அவகாசம், 6 வாரம் அவகாசம், 3 மாசம் அவகாசம் என்று, இங்கிலாந்தில் இருக்கும் பிரபுவின் பதிலுக்காக நேரம் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதே கருமாந்திரத்தை இன்னமும் தவறாமல் தவறாக கடைப்பிடிப்பது ஏன்? இந்த மின்னணு யுகத்தில் இன்னும் தட்டழுத்தை செய்து கொண்டு, மக்கிப் போன பேப்பரில் வாய்தா எழுதிக் கொண்டு, எப்படி மாறும். சட்டத்தை விடுங்கள், இந்த காலத்திலும் கோடை விடுமுறை கோர்ட்டுக்கு? வெள்ளைக்காரன் காலத்தில் இருந்தது. வேறு எந்த அலவலகம் கோடைக்கு மூடப் படுகிறது சொல்லுங்கள். தேவையான மாற்றத்தை கொண்டு வராமல் சும்ம்மா இப்படி சொல்வதால் எப்படி ஜட்ஜையா மாறும்? இப்படி சொல்லியே ஏமாற்றும் நீங்களும் அரசியல்வாதியும் ஒன்று தானையா..
இதே விழாவில் பேசிய, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி,
''விரைவாக தீர்ப்பு கிடைக்க வேண்டும்  என்ற மக்களின் எதிர்பார்ப்பை நீதிமன்றங்கள் நிறைவேற்ற வில்லை,'' என்றார்  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக