திங்கள், 14 மார்ச், 2016

அம்மா நாங்க உங்க பக்கம் - கார்டனில் குவியும் அரசியல் தலைவர்கள்

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை ஏழு கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவு தெரிவித்தனர். தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் 16.5.2016 அன்று நடைபெற உள்ளது. இதனையடுத்து, அதிமுக  பொதுச் செயலாளரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவை, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர், இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் கதிரவன், தமிழ் நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவன அமைப்பாளர் தனியரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் தி. வேல்முருகன், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷேக் தாவூத், சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் ஆகியோர் தனித் தனியே நேரில் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தமது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக