திங்கள், 14 மார்ச், 2016

தேமுதிக சிங்கை பஷீர் திமுகவில்...... பெரும்பாலான தேமுதிக மசெக்கள்....

தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் தேமுதிக உள்ளது. ;இந்த தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை மிகவும் சஸ்பெண்ஸாக வைத்து இருந்த விஜயகாந்த், கடைசியில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என அறிவித்தார். இதனால்,  தேமுதிக  திமுகவுடன் கூட்டணி சேரும்  என நம்பி இருந்த  பல தேமுதிக தொண்டர்கள்  பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.  இராமநாதபுரம் மாவட்டத்தில் தேமுதிகவுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்தவர் தொழிலதிபர் பெரிய பட்டணம் சிங்கை பஷீர். இவர், இராமநாதபுரம் திமுக மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்  கே.ஆர். பெரியகருப்பன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் , அண்மை காலங்களாக தேமுதிகவும்  வைகோ கட்சி போலவே காணமல் போய்விடுமோ என்ற அச்சம் பல மசெக்களுக்கு தொண்டர்களுக்கும் இருப்பது உண்மையே. அவர்கள் திமுக கூட்டணியை எதிர்பர்த்திருந்ததாக சொல்லபடுகிறது. அது பலிக்காமல போகவே பலரும் சிங்கை பஷீர் போலவே திமுகவில் இணையும் தீர்மானத்தில் உள்ளனர் . அதற்கு திமுக தரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டு உள்ளது . இதன் மூலம் திமுக- தேமுதிக கூட்டணி எதிர்பார்ப்பு மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக