புதுடில்லி: நடக்க இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வுடன் அணி
சேர்ந்தால் அதிமுக.,வுக்கு 41% வெற்றி கிடைக்கும். தனித்து நின்றால்
அ.தி.முக.,வுக்கு 116 இடங்களும், திமுக.,வுக்கு 101 இடங்களும் கிடைக்கும்.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என இந்தியா டிவி நடத்திய தேர்தலுக்கு
முந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.5 மாநில சட்டசபை
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தியா டிவி சார்பில்
கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில், கேரளா மற்றும் அசாம் தவிர
மற்ற 3 மாநிலங்களிலும் ஆட்சி மாற்றம் ஏற்பாடு என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஆளும்கட்சியான
அதிமுக.,116 இடங்களிலும், திமுக., 101 இடங்களிலும் வெற்றி பெறும். மீதமுள்ள
17 இடங்களில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெறும்.
பா.ஜ.,விற்கு ஒரு இடம் கூட கிடைக்காது என கூறப்பட்டுள்ளது. அனைத்து
மாநிலங்களிலும் ஆளுங்கட்சியின் ஓட்டு எண்ணிக்கை சரியும் என்பதையே
ஓட்டுமொத்த கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகம் : மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 116 இடங்களிலும் (கடந்த முறை 203 இடங்கள்), திமுக 101 இடங்களிலும் (கடந்த முறை 31 இடங்கள்), மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் வெற்றி பெறும். பா.ஜ.,விற்கு ஒரு இடம் கூட கிடைக்காது. அதிமுக., வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை பெறுவதற்கு 2 இடங்கள் குறைவாக இருக்கும். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., அணி சேர்ந்தால், ஓட்டு சதவீத அடிப்படையில், அதிமுக அணி 41.1 சதவீதம் (கடந்த முறை 51.9), திமுக கூட்டணி - 39.5 சதவீதமாக இருக்கும். பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் கடந்த முறை இருந்த 2.2 சதவீதத்தை விட அதிகரித்து 5 சதவீதமாக இருக்கும்.
கேரளா : உம்மன் சாண்டியின் ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சியை இழக்கும். இந்த கூட்டணி 49 இடங்களில் (கடந்த முறை 72 இடங்கள்) வெற்றி பெறும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சி 89 இடங்களில் வெற்றி பெற்று, 140 இடங்களைக் கொண்ட கேரள சட்டசபையில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்.
மேற்குவங்கம் : மம்தாவின் திரிணாமுல் காங்.,294 தொகுதிகளில் 156 இடங்களில் (கடந்த முறை 284 இடங்கள்) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். இடதுசாரிகள் 114 இடங்களில் வெற்றி பெறுவர். திரிணாமுல் காங்.,க்கு 37.1 சதவீதமும், இடுதுசாரிகளுக்கு 34.6 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்கும்.
அசாம் : 126 இடங்களைக் கொண்ட சட்டசபையில் பா.ஜ., கூட்டணி 57 இடங்களில் வெற்றி பெறும். பெரும்பான்மைக்கு 7 இடங்கள் குறைவாக இருக்கும். முதல்வர் தருண் கோகாயின் காங்., கட்சி 44 இடங்களில் வெற்றி பெறும்.
மாநிலவாரிய கருத்து கணிப்பு முடிவுகள் :

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக