சென்னை: முதல்வர் வேட்பாளர்களாக போட்டியிடும் தேமுதிகவின்
விஜயகாந்துக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரனையும், பாமகவின் அன்புமணி
ராமதாசுக்கு எதிராக பண்ருட்டி வேல்முருகனையும் களமிறக்க அதிமுக தலைமை
முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபைத் பொதுத்தேர்தல் மே 16ம் தேதி நடைபெறுகிறது. அதிமுகவை
பொறுத்தவரை, கூட்டணிக்கட்சி வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று
தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
200 தொகுதிகள் வரை அதிமுக போட்டியிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வேட்பாளர் பட்டியலும் ஏற்கெனவே தயாராகிவிட்டதாம். பெண்கள், படித்தவர்கள்,
இளைஞர்கள் என அதிக அளவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்பது
உறுதியாகிவிட்டது.
முதல்வர் வேட்பாளர்கள்
திமுக, தேமுதிக, பாமக கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களுக்கு எதிராக
செல்வாக்குமிக்க பிரபலங்களை நிறுத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினை எதிர்த்து அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் நிறுத்தப்படுவார்
என்று கூறப்படுகிறது
விஜயகாந்த் - பண்ருட்டி ராமச்சந்திரன்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை
எதிர்த்து பண்ருட்டி ராமச்சந்திரன் நிறுத்தப்பட உள்ளாராம். தேமுதிகவில்
அவைத்தலைவராக இருந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
அன்புமணி - வேல்முருகன்
பாமக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அன்புமணி ராமதாஸ்
போட்டியிடும் தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி
வேல்முருகன் நிறுத்தப்படலாம் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பண்ருட்டி பலாப்பழங்கள்
பாமகவில் இருந்த பண்ருட்டி வேல்முருகன், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து
தமிழக வாழ்வுரிமை கட்சியைத் தொடங்கினார். இப்போது பாமகவின் முதல்வர்
வேட்பாளருக்கு எதிராகவே களமிறக்கப்பட உள்ளாராம். எப்படியோ விஜயகாந்த்,
அன்புமணிக்கு பண்ருட்டி பலாப்பழக்களை பார்சல் செய்ய முடிவெடுத்துவிட்டார்
ஜெயலலிதா.
Read more at:://tamil.oneindia.com/
Read more at:://tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக