திங்கள், 21 மார்ச், 2016

வெங்கையா நாயுடு : கடவுள் தந்த பரிசு பிரதமர் மோடி.......ஏனுங்க சுனாமி, நிலநடுக்கம் எல்லாம்..?

பிரதமர் மோடி கடவுள் தந்த பரிசு என மத்திய அமைச்சர் வெங்கயைா நாயுடு கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியின் புகழ் உலகம் முழுவதும் பரவி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டத்தில் வெங்கையா பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் பேசுகையில் ; இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தற்போதைய அரசு வளர்ச்சியை மட்டுமே இலக்காக டைம் பத்திரிகை மோடிய தலை சிறந்த தலைவர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளது. சமூக வலை தளங்களில் மோடி புகழ் பெற்றவராக திகழ்கிறார். பேஸ் புக்கில் 32 மில்லியன் மக்கள் , டுவிட்டரில் 18 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர்.  வெங்காயம் இனி மண்சோறு துண்றதுதான் பாக்கி...வெங்காயத்துக்கு மட்டும் அல்ல அதானி அம்பானி மல்லையா சு.சாமி எல்லாருக்கும்தான் மோடி ஒரு பம்பர்  பரிசுதான்..
உலக புகழ்பெற்ற லண்டன் அருங்காட்சியகத்தில் மோடியின் மெழுகு சிலை அமைக்க தாமாக முன் வந்து ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியாவில் வேலை வாய்ப்பை உருவாக்குவதும், வறுமையை ஒழிப்பதும், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லவதும் தான் எங்களின் இலக்கு. இவ்வாறு வெங்கையா பேசினார்
கொண்டு செயல்பட்டு வருகிறது. நாட்டில் ஒவ்வொரு துறையிலும் பெரும் சவால்கள் உள்ளன. இதனை பிரதமர் மோடி மீட்டு எடுத்து வெற்றி பெற்று
வருகிறார். கடவுள் , பிரதமர் மோடியை இந்தியாவுக்கு கொடுத்த பரிசாக கொடுத்துள்ளார். மோடி ஏழைகளின் தீர்க்கத்தரிசி. மோடி இன்று உலக அளவில் புகழ் பெற்ற தலைவராக உருவெடுத்துள்ளரார். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக