திங்கள், 21 மார்ச், 2016

தேமுதிக நிர்வாகிகள் கெஞ்சல்.....போலீசுக்கு போகாதீங்க...ஆப்புக்கே ஆப்பா....சஸ்பென்ஸ்ஸுகே சஸ்பென்ஸா?

 'ஓடினார்... ஓடினார்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினார்...' என்பது, 'நானா பழம்?' என, சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கப்பட்டவருக்குப் பொருந்தும் போல. 'என்னோடு சேர்ந்து பாருங்கள்... என்னோடு சேர்ந்து ஆடுங்கள்...' என, 'டூயட்' ரேஞ்சுக்கு ஆரம்பித்து, 'மூன்றாம் பிறை' பட கமல் பாணியிலெல்லாம் கெஞ்சி, இறுதியில், 'பாலும் பழமும்' பட ரேஞ்சுக்குச் சென்ற, தி.மு.க.,வுக்கு, 'பெப்பே' காட்டுவதாய் நினைத்து, 'தனித்துப் போட்டி' என அறிவித்த, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்துக்கு, இப்போது புது சிக்கல்எழுந்திருக்கிறது. எழாதா பின்னே! ஒண்ணா, ரெண்டா...   இவர் கூட்டங்களுக்கு அதிக அளவில் ஆட்களை அனுப்பி அதிமுகவினர் கேப்டனை தனக்காகத்தான் கூட்டம் வருகிறது என்று நம்ப வைத்து அவரை தனியாக நிற்கவைத்து இவரை செல்லா காசாக்கி விட்டனர்...பண்டிகைக்கு ஒரு பலி கடா போல அம்மாவுக்கு தேர்தலுக்கு ஒரு பலிகடா என்றால் அது கேப்டன் தான் .. மறுபடியும் மறுபடியும் பலிகடா
தமிழகத்தில், பொதுத் தொகுதியில் போட்டியிட, 10 ஆயிரம் ரூபாய்; தனித்தொகுதிக்கு, 5,000 ரூபாய்; புதுச்சேரியில் பொது தொகுதிக்கு, 5,000 ரூபாய்; தனித்தொகுதிக்கு, 2,000 ரூபாய் கட்டணம் என, சட்டசபைத் தேர்தலுக்குப் போட்டியிட, வேட்பாளர்களிடமிருந்து வசூலித்தார்.இலவு காத்த கிளியாகக் கிடந்த பல உறுப்பினர்களும் பாவம், வீட்டிலுள்ள ஓட்டை, உடைசல் சாமான்களையெல்லாம் விற்றுப் பணமாக்கி கப்பம் கட்டினர்;
'லோக்சபா தேர்தலில் செய்த தவறை இப்போது செய்ய மாட்டார்; தி.மு.க.,வோடு கூட்டணி வைத்து, நாமெல்லாம் எப்படியாவது கரை சேர்ந்து விடுவோம்' என்ற கற்பனையில் மிதந்தபடி! இப்படி நினைத்தவர்கள் அனைவருக்கும் வைத்தாரே ஒரு, 'ஆப்பு' - தனித்துப் போட்டி என்ற ஆப்பு... ஆடி விட்டனர் அனைத்து தொண்டர்களும். 'இரு... இரு... நாங்க வைக்கிறோம் உனக்கு ஆப்பு' என்கிற விதமாய், 'சீட்' கேட்டு மனு செய்த, 2,500 பேரும் ஒரு முடிவுக்கு வந்தனர்.மாவட்டச் செயலர்களை தொடர்பு கொண்டு, கட்சி தலைமை
அலுவலகத்தில் கட்டிய பணத்தை திரும்ப பெற்று தருமாறு தொல்லை கொடுக்கத் துவங்கினர். அப்போது, இவர்களே எதிர்பாராத வகையில், 'அண்ணே... நாங்களும் அந்த மனநிலைதாண்ணே இருக்கோம்... வாங்கண்ணே, எல்லாரும் பட்டியல் கொடுப்போம்' எனக் கேட்க, பட்டியல் தயாரிக்கப்பட்டு,மாநில நிர்வாகிகளுக்கு அனுப்பப்பட்டது.இதைப் பார்த்த மாநில நிர்வாகிகள், அதிர்ச்சியில் உறைந்து போயினர். வாய் திறக்க முடியவில்லை; தந்தி அடித்தது.இவர்களிடமிருந்து பதில் ஏதும் கிடைக்காத காரணத்தால், மா.செ.,க்கள் பிளஸ் விண்ணப்பம் கொடுத்தவர்கள் அனைவரும், விவகாரத்தை போலீசாரிடம் புகாராக அளிக்கத் திட்டமிட்டனர்.ஏற்கனவே பீதியில் உறைந்த நிர்வாகிகள், இதைக் கேட்டதும், கையைப் பிசைந்து நிற்பதை விட, சண்டைக்காரர்கள் காலில் விழுந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.

நிலைமையை தலைமையிடம், 'பக்குவமாக' (இல்லையெனில், மண்டையில் குட்டோ, அடியோ விழும்) எடுத்துச் சொல்லி, பிரச்னைக்குத் தீர்வையும் கூறினர். கட்சித் தலைமை, வழக்கம் போல, முகத்தைக் கீழிறக்கி, மேல் பார்வை பார்த்து, 'கடுகடு' முகத்துடன், 'செய்ங்க...' என உத்தரவிட்டது. பிரச்னைக்குத் தீர்வு, 'பறக்கும் படை கண்காணிப்பு இருப்பதால், தேர்தல் முடிந்த பிறகு, பணத்தை திரும்ப ஒப்படைக்கிறோம்' என்பது தான்.இதையடுத்து, போலீசுக்கு செல்வதாககூறியவர்களை, மாநில நிர்வாகிகள் தொடர்புக் கொண்டு பேசி வருகின்றனர். ஆனால், பணம் கொடுத்தவர்களோ, 'எழுத்து மூலமாக, உறுதி கொடுத்தால் மட்டுமே, போலீசை அணுக மாட்டோம்' எனக் கூறுகின்றனர். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல், மாநில நிர்வாகிகள் தலையை பிய்த்து கொள்கின்றனர்.கடுப்பில் இருக்கும், மா.செ.,க்கள் பலர், 'கிங்கா இருக்கணும்னு நினைச்சவர் இப்போது, ஓடினார்... ஓடினார்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினார்...' என கிண்டலடிக்கின்றனர்.

தேர்தல் அறிக்கை வெளியீடு:
கடந்த மாதம், காஞ்சிபுரத்தில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில், தேர்தல் அறிக்கையின், முதல் பாகம் வெளியிடப்பட்டது. இதையடுத்து, இரண்டாம் பாகத்தை, தே.மு.தி.க., தலைமை, நேற்று, எந்த ஆரவாரமும் இல்லாமல் வெளியிட்டது. இது குறித்து தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:'தன் தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமையும்' என, விஜயகாந்த் கணக்கு போட்டார். கூட்டணி அமைந்த உடன், தேர்தல் அறிக்கையின், இரண்டாம் பாகத்தை வெளியிட விரும்பினார். இதனால், மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு கிடைக்கும் என கணக்கு போட்டார். எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. கட்சியினரும், விஜயகாந்த் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த நேரத்தில், விழா நடத்தி, தேர்தல் அறிக்கை வெளியிட்டால், பிரச்னை ஏற்படும்; விழாவிற்கு வரும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும், பதில் அளிக்க வேண்டியது வரும். இதை எல்லாம் மனதில் கொண்டு, சத்தமின்றி, கேப்டன், 'டிவி'யில், தேர்தல் அறிக்கை, இரண்டாம் பாகம்   தினமலர்.com வெளியிடப்பட்டுள்ளது.
- நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக