சனி, 5 மார்ச், 2016

தர்மபுரி பஸ் எரிப்பு உணர்ச்சிவசத்தால் நடந்தது தண்டனையை குறைக்க அ.தி.மு.க.,வினர் வேண்டுகோள்

ஜெயை தெய்வமாக எண்ணினால் உணர்ச்சி வசப்பட்டால் அந்த கொலைகாரர்கள் மூவரும் தீக்குளித்து சாக வேண்டியதுதானே?அந்த நிலையிலும் தன உயிரை பாதுகாத்துக்கொண்டு அடுத்த வீட்டுப் பெண்களை,தீவைத்துக்கொளுத்துவதில் என்ன உணர்ச்சி பாடல் இருக்கிறது.தான் பூசிக்கும் தலைவிக்கு தன உயிரை கொடுக்காமல் இருப்பதற்காகவே இந்த கொலைகார நாய்களை நடுத்தெருவில் வைத்து தீ வைத்து கொளுத்த வெண்டும்.அப்போதுதான் அரசியல் அடியாட்களுக்கு பயம் வரும் .அடக்கி வாசிப்பார்கள்.இவர்களை மன்னித்து விடுவது.தவறான முன்னுதாரணமாகி விடும். புதுடில்லி: 'மூன்று மாணவியர் பலியாகக் காரணமாக இருந்த, தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம், உணர்ச்சிவசத்தால் நடந்தது; திட்டமிட்டு நடத்தப்பட்டதல்ல' எனக்கூறி, அந்த வழக்கில் துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், தங்கள் தண்டனையைக் குறைக்கும்படி, சுப்ரீம் கோர்ட்டில் வேண்டுகோள் விடுத்தனர். மாபாதக  குற்றம் செய்துவிட்டு கருணை கேட்கும் பித்தலாட்டம்

கொடைக்கானல், பிளசன்ட்ஸ்டே ஓட்டலுக்கு விதிகளை மீறி, அனுமதி அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, 2,000 பிப்ரவரி, 2ல், இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது.தர்மபுரியில், கோவை வேளாண் கல்லுாரி மாணவர்கள் வந்த பஸ்சுக்கு அ.தி.மு.க.,வினர் தீ வைத்தனர். இதில், கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்ற, மூன்று மாணவியர் பலியாகினர்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய, அ.தி.மு.க., நிர்வாகிகள், நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரை குற்றவாளிகள் என, அறிவித்த, சேலம் நீதிமன்றம், துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை, சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தன. இந்தத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, தண்டனை பெற்றவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண்மிஸ்ரா மற்றும் பிரபுல்ல சி.பந்த் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முனியப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் வாதிட்டதாவது: மூன்று மாணவிகள் பலியானது திட்டமிட்டு நடந்ததல்ல; கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட உணர்ச்சிவசத்தால் நிகழ்ந்தது. கட்சித் தொண்டர்கள், தங்கள் தலைவர்கள் மீது அதீத அன்பு வைத்திருக்கின்றனர். தலைவர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால், அவர்கள் போராட்டம் நடத்துவதுமட்டுமின்றி, தற்கொலையும் செய்து கொள்கின்றனர். எனவே, மூவரின் துாக்கு தண்டனையையும், ஆயுளாகக் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து, நீதிபதிகள், 'துாக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாக இருந்தால், எத்தனை ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருக்க வேண்டும்' என, தெரிவிக்கும்படி கூறி, வழக்கின் விசாரணையை, மார்ச், 11க்கு தள்ளிவைத்தனர். 'தெய்வமாக வணங்குகின்றனர்':
தண்டனை பெற்ற ரவீந்திரன், நெடுஞ்செழியன் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் சுஷில்குமார் கூறியதாவது: ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதால், அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல்கலைக்கழக பஸ்சுக்கு தீ வைத்தனர். அதில், மூன்று மாணவியர் பலியானது, துரதிருஷ்டவசமானதே. கட்சித் தொண்டர்கள், தங்கள் தலைவர்களை தெய்வமாக வணங்குகின்றனர். பெங்களூரு நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய போதும், தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதனால், தண்டனையை கு  தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக