புதன், 9 மார்ச், 2016

BBC:தில்லி பாலியல் வன்முறை...எரிக்கப்பட்ட 15-வயது சிறுமி மரணம்

இந்திய தலைநகர் தில்லியில் இரண்டு நாட்களுக்கு முன்னர்,பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, தீயினால் எரிக்கப்பட்டதாக நம்பப்படும் 15-வயது சிறுமி இன்று உயிரிழந்துள்ளார். அந்த சிறுமியின் உடலின் 95 சதவீதமளவுக்கு தீக் காயங்கள் ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த சிறுமியை பின் தொடர்ந்தவராக நம்பப்படும் ஒரு சந்தேக நபரை காவல் துறையினர் தடுத்து வைத்துள்ளனர். சந்தேக நபர் அந்த பெண்ணின் நெருங்கிய ஆண் நண்பராக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
வேறொரு சம்பவத்தில் இந்தியாவின் வடக்கில் உள்ள பரேய்லி நகரில் பேருந்தில் சென்ற பயணி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் அந்த பேருந்தின் ஓட்டுநரும் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியபோது, அவரது குழந்தை கீழே விழுந்து இறக்கவும் இவர்கள் காரணமாகியுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்தியாவில் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அதிகரித்துவருவதாக தேசிய அளவில் கவலைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது tamil.bbc.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக