செவ்வாய், 8 மார்ச், 2016

தினமலர்: தி.மு.க.,வில் 65 பெண்களுக்கு 'சீட்'

சட்டசபை தேர்தலில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கும் வகையில், மாவட்டத்திற்கு ஒரு பெண் வேட்பாளரரை களமிறக்க, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.< லோக்சபா, சட்டசபை மற்றும் பொது மேடைகளில், பெண்களுக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதை, கட்சிகள் ஆதரித்து பேசி வருகின்றன. ஆனால், சட்டசபை தேர்தல்களில், 'சீட்' ஒதுக்கும்போது, அவற்றை செயல்படுத்த தவறி விடுகின்றன. மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உள்ளிட்ட பலருக்கும் முக்கியத்துவம் அளித்து, தேர்தல் அறிக்கை தயார் செய்யும் பணிகளில், தி.மு.க., தலைமை ஈடுபட்டு வருகிறது. 'தி.மு.க., போட்டியிடும் தனித்தொகுதிகளில், 14 பெண்களை நிறுத்த வேண்டும்' என,கட்சி தலைவர் கருணாநிதியிடம், மகளிர் அணி செயலர் கனிமொழி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இதையடுத்து, தேர்தலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தி.மு.க., சார்பில், 65 மாவட்டங்களிலும், தலா ஒரு பெண் வேட்பாளர் என, 65 பெண் வேட்பாளர்களை அறிவிக்க, தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ள தகவல்கள் வெளியாகி உள்ளன. தினமலர்.com

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக