வெள்ளி, 18 மார்ச், 2016

10 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் படுகொலை.ஹைதராபாத்தில் (ஆடியோ) அக்கிரமம்


ஐதராபாத்தில் பத்து கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட 15 வயது சிறுவனை கடத்தல்காரர்கள் கொலை செய்தனர். ஐதராபாத் நகரின் ஷாகினாயாத்காஞ் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் அபாய் மொதானி (வயது 15) கடந்த புதன்கிழமை மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற அபாய், மாலை வரையில் சிறுவன் வீடு திரும்பவில்லை. சிறுவனை கடத்தி விட்டதாகவும், தங்களுக்கு பணம் வேண்டும் என்றும் கடத்தல்காரர்கள் சிறுவனின் பெற்றோருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளனர். அவர்கள் சிறுவனை விடுவிக்க ரூ.10 கோடி கொடுக்க வேண்டும் என்று கேட்டு உள்ளனர். பின்னர் ரூ. 5 கோடி கேட்டு உள்ளனர்.


இதற்கிடையே, ஒருவரது பைக்கின் பின்னால் அபாய் அமர்ந்து செல்லும் சி.சி.வி.டி. காட்சிகளை கண்ட போலீசார், அவரை சிறுவனுக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கலாம் என கருதினர். இதற்கிடையே கடத்தல் தொடர்பாக 3 பேரின்மீது சந்தேகப்பட்டு, 10 தனிப்படைகளை அமைத்து அவர்களை பிடிப்பதற்கான பணியினை தீவிரப்படுத்தினர். அவர்கள் தேடுதல் பணியை தொடங்கினர்.

இந்நிலையில், சிறுவனின் உடல் செகந்திராபாத்தில் உள்ள அல்பா ஓட்டலில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கைகள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு, ஒரு டி.வி. பெட்டிக்குள் அமர்ந்தநிலையில் இருந்த அபாய் மொதானியின் பிரேதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக