திங்கள், 29 பிப்ரவரி, 2016

RSS-க்கு ஆப்பு ! இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக..


வின்.டிவி-யின் விவாத நிகழ்ச்சியில் பு.மா.இ.மு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் கலந்து கொண்ட வீடியோ தொகுப்பு இது. வின் டி.வி நெறியாளராக இருக்கும் தம்பி நிச்சயமாக அம்பிதான் எனுமளவுக்கு பாசிசக் கருத்துக்களை பத்தாம் வகுப்பிலேயே உருப்போட்டவர் போலும். மாணவர்களுக்கு அரசியல் கூடாது, அப்சல் குருவை ஆதரித்தால் தூக்கில் போடுவது சரி – விட்டால் நானே போடுவேன், கண்ணையா குமாரை கைது செய்தது சரி, தேச துரோக முழக்கங்கள் போட்டார்கள் என்பதாகவே முதலுரை, இடையுரை, முடிவுரை என எல்லா உரைகளிலும் முழங்கினார்.
இருப்பினும் தோழர் கணேசன் இடைமறிப்பை போதுமான அளவுக்கு அனுமதித்தார் அல்லது அனுமதிக்கப்பட்டார் என்பதையும் நாம் நன்றியுடன் கூற வேண்டும். சங்க வானரப்படை சார்பாக வந்த நரசிம்மன் என்பவர் நெற்றியில் நாமமும், பேச்சில் விசமுமாக இருந்தார் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை.
ஆக ஆர்.எஸ்.எஸ் அம்பியும், வின்.டிவி தம்பியும் என்ன பேசியிருப்பார்கள் என்பதை பாண்டேக்களை அறிந்தவர்களுக்கு போரடிக்கும் விசயம்.
இந்த வீடியோவின் இரண்டாம் பாகத்தில் தோழர் கணேசன் , அம்பி – தம்பி கூட்டணியை உலுக்கு உலுக்கு என்று உலுக்கினார். முத்தாய்ப்பாக ஆர்.எஸ்.எஸ் கூட்டம்தான் இந்த நாட்டின் பயங்கரவாதிகள் என்ற உண்மையை ஓங்கிச் சொன்னார். எள்ளும் கொள்ளும் வெடித்த நரசிம்மன் நிகழ்ச்சி முடியும் போது கொஞ்சம் விறைப்போடு காக்க காக்க போலிசு மாதிரி முன் வந்த போது தோழர் கணேசன் எடுத்த விசுவரூபத்தைக் கண்டு பின்வாங்கினார். அதே போல விவாதத்தை நடத்திய தம்பியிடம், நீங்களும் ஆர்.எஸ்.எஸ் கூட்டமும் ஒரு கருத்தை விவாதம் என்று திணிப்பதற்கு என்னை ஏன் அழைத்தீர்கள் என்று கேட்டார். பரபரப்பான காட்சிகள் இரண்டாம் பாகத்தில். அதை விட பரபரப்பு ஆஃப் லைனில் நடந்ததால் அதை இங்கே வெளியிட முடியவில்லை.
எனினும் பாண்டேக்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஒரு ஆர்.எஸ்.எஸ் அம்பி பயங்கரவாதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறார்.  vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக