சனி, 27 பிப்ரவரி, 2016

சத்தியபாமா MP கணவனை கொல்ல முயற்சி? அதிமுக பெண் எம்பிக்கு எதிராக கணவன் புகார்

திருப்பூர் அதிமுக பெண் எம்.பி. சத்தியபாமா.  இவரது கணவர் வாசு.  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் வசிக்கும் சத்தியபாமா கடந்த எம்.பி. தேர்தலில் திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றியும் பெற்றார். திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்டதுதான் கோபிசெட்டிபாளையைம் சட்டமன்ற தொகுதி.   சத்தியபாமாவுக்கும் அவரது வாசுவுக்கும் கடந்த 6,7 வாரங்களாக கருத்து வேற்றுமை இருந்து வந்துள்ளது.  இதனால் கணவன் - மனைவி இருவரும் தனித்தனியாக வசிக்கிறார்கள்.எம்.பி. சத்தியபாமா தனது பொருளாதாரத்தை முழுவதும் சுரண்டிவிட்டதாகவும்,  தன்னால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டு, கட்சியின் மேலிடம் வரை செல்வாக்கை பெற்றுகொடுத்ததன் விளைவு, எம்.பியாகும் வரை வளரமுடிந்தது.
 இப்போது தன்னை ஒதுக்கிவிட்டு கட்சிவேலை என ஊர் ஊராக சுற்றுகிறார் எனவும், கோபிசெட்டிப்பாளையம் அதிமுக நகர செயலாளர் சையத்புடான்ஷா’தான் இப்போது சத்தியபாமாவுடன் உடன் இருக்கிறார் என்றும், இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும்  பல புகார்களை கூறிவந்த,  எம்.பியின் கணவர் வாசு,  முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புகார் மனு அனுப்பியுள்ளார்.  அவர் அனுப்பிய புகார் மனு விவரம் :

பெண் எம்.பியின் கணவர் அளித்துள்ள புகார் அதிமுக மேலிடம் வரை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, பெண் எம்.பிக்கு உதவிகரமாக இருக்கும் அதிமுக பிரமுகர்களும் பீதியடைந்துள்ளனர்.>ஜீவா தங்கவேல்  nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக