சனி, 27 பிப்ரவரி, 2016

சிறுமிகளுக்கு கதற கதற அதிமுக பச்சை....அமைச்சரே அரங்கேற்றிய கொடுமை

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் பால் குடம், யாகம், ரத்ததானம் செய்த ரத்தத்தின் ரத்தங்கள், சென்னை வேளச்சேரியில் சிறுமி ஒருவர் கதற கதற பச்சை குத்தியுள்ளனர். அமைச்சர் முன்னிலையில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவின பிறந்தநாளையொட்டி அதிமுகவினர் நலத் திட்ட உதவிகள், திருமணங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். ஒருபக்கம் அன்னதானங்கள் நடந்து கொண்டிருக்க, கடந்த 23ம் தேதி வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில், 668 பேரின் வலது கையில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவத்தை பச்சை குத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விடியோவை பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை அதனால் அதை பதிவேற்றம் செய்யவில்லை சிறுவர் பாதுகாப்பு சட்டம் என்ன செய்கிறது?
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி, விஸ்வநாதன், ஆர்.வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். பெண்கள், ஆண்கள் என 1000 பேருக்கு முதல்வர் ஜெயலலிதா படத்தை பச்சை குத்தி விட்டனர். இதில் ஒரு சிறுமிக்கு ஜெயலலிதா உருவம் பச்சை குத்தப்பட்டது. அப்போது, பச்சை குத்திக் கொண்ட அந்த சிறுமி வலி தாங்காமல் அழும் வீடியோ தற்பொழுது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் முன்னிலையிலேயே அந்த சிறுமிக்கு பச்சை குத்தப்பட்டுள்ளது தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதால் மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நல்லா கொண்டாடுறாங்கய்யா பிறந்தநாளு..

Read more at:://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக