புதன், 24 பிப்ரவரி, 2016

JNU மாணவர்களை தாக்கிய வழக்கறிஞர்கள் நீதிமன்றில் ஆஜர்...

தேசத் துரோக வழக்கில் கைதாகியுள்ள டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கண்ணையா குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது கடந்த 17-ம் தேதி பாட்டியாலா கோர்ட்டில் ஒரு வழக்கறிஞர் கும்பல் கடுமையாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தலைமையேற்று நடத்திய விக்ரம் சவுகான், யஷ்பால் சிங், ஓம் சர்மா ஆகிய வழக்கறிஞர்கள் மீது டெல்லி போலீஸ் எவ்வித நடவடிகையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று டெல்லி போலீஸ், வழக்கறிஞர் யஷ்பால் சிங்கை கைது செய்தது. மேலும் மீதமுள்ள இரண்டு வழக்கறிஞர்களுக்கும் சம்மன் அனுப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்தது. டெல்லி போலீஸ் பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜர் ஆகாத வழக்கறிஞர் விக்ரம் சவுகான் இன்று போலீஸ் முன் ஆஜர் ஆனார். டெல்லியில் உள்ள திலக் மார்க் காவல் நிலையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்துள்ளார் அவர். மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக