புதன், 24 பிப்ரவரி, 2016

பிணமாக மீட்பு.. அமெரிக்காவில் காணமல் போன ஐதராபாத் தந்தை பிரசாத் மொபார்த்தி

மாநிலம், ஐதராபாத் நகரை சேர்ந்தவர் பிரசாத் மோபார்தி(55). தனது மகளின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் கலிபோர்னியா நகருக்கு கடந்த ஜனவரி மாதம் சென்றார். கடந்த 13-ம் தேதி மகள் துர்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மகிழ்ச்சியாக இருந்த பிரசாத் அன்று மாலை சுமார் 4 மணியளவில் நடைபயிற்சிக்காக வெளியே சென்றார். ஆனால், பின்னிரவுவரை அவர் வீடு திரும்பாததை அறிந்த மணமகள் துர்கா(28), இதுதொடர்பாக, போலீசில் புகார் அளித்தார். மோப்பநாய் மற்றும் ஹெலிகாப்டர் உதவியுடன் போலீசார் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியும் அவரைப்பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. அருகாமையில் உள்ள நகரங்களில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு அவரைப் பற்றிய தகவல்களை பரிமாறி, தேடி வந்தனர்.


இந்நிலையில், காணாமல் போய் 10 நாட்களுக்குப் பிறகு பிரசாத் மோபார்தி, பிணமாக மீட்கப்பட்டுள்ளார். திருமண வரவேற்பு நடைபெற்ற இடத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த கால்வாயில் அவரது உடல் கிடந்ததை, அவ்வழியாக படகில் சென்றவர்கள் கண்டு போலீசுக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மொபார்தியின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால், அவரது இறப்புக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. பிரேத பரிசோதனைக்குப் பிறகே தெரியவரும் மாலைமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக