செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

JNU சங்பரிவார் தயாரித்த போலி விடியோ.. கண்ணையா குமாரின் ஒரிஜினல் விடியோ வெளியானது...பொய் சொல்லும் போலீஸ்


ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கன்னையா குமார் அரசியலமைப்பிற்கு விரோதமான கோஷங்கள் எழுப்பினார் என்று போலீஸ் அறிக்கையில் தெரிவித்து உள்ளது, அறிக்கையை இன்று ஐகோர்ட்டில் சமர்பிக்கிறது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9–ந் தேதி, பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பியதாக கூறப்படுகிறது.
மிகவும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் இயக்க தலைவர் கன்னையா குமாரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது தேசவிரோத வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னையா குமாருக்கு, ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கன்னையா குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. மனுதாரர்கள் மனுவில் உரிய திருத்தங்களை செய்து டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்யலாம் என்று கடந்த 19-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டு கூறியது. இதனையடுத்து கன்னையா குமார் தரப்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இவ்விவகாரம் தொடர்பாக இன்று ஐகோர்ட்டு முடிவு செய்ய வாய்ப்பு உள்ளது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி ஐகோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிற்கு எதிராக மாணவர்கள் கோஷம் எழுப்பியது தொடர்பான வீடியோ காட்சியில் கன்னையா குமார் இடம்பெற்று உள்ளார் என்று போலீஸ் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்சல் குருவின் நினைவு தினம் அனுசரிக்க அனுமதி மறுக்கப்பட்டும் அவரது தலைமையில் முன்னெடுக்கப்பட்டு உள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விசாரணையில் 8 மாணவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளது என்று போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. மாணவர் கன்னையா குமார் அரசியலமைப்பிற்கு விரோதமான கோஷங்கள் எழுப்பினார் என்று போலீஸ் அறிக்கையில் தெரிவித்து உள்ளது, அறிக்கையை இன்று ஐகோர்ட்டில் சமர்பிக்கிறதுdailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக