செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கன்னையா குமாருக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பு கடும் எதிர்ப்பு...

தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜவஹர்லால் நேரு  பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர்  கன்னையா குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு போலீஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கன்னையா குமார் ஜாமீன் மனுவை இன்று டெல்லி உயர் நீதிமன்றம் விசாரித்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷர் மேதா, நீதிபதி பிரதீபா ராணியிடம், நாங்கள் இந்த ஜாமீன் மனுவை எதிர்க்கிறோம் என்றார். அப்போது குறுக்கிட்ட நிதிபதி, நீங்கள் விசாரணை  அறிக்கையை தாக்கல் செய்துவிட்டீர்களா? நீங்கள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவில்லையென்றால், விசாரணையை நடத்தப்போவது இல்லை. நாளைக்குள் விசாரணை அறிக்கையை  தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.  இட்டுக்கட்டிய வழக்கல்லவா? காவியும் காக்கியும் குடுமியும் ஒண்ணாச்சு... வெளியே இருக்க வேண்டியவங்க உள்ளே இருக்காங்க ..உள்ளே இருக்கவேண்டியவங்க ஆட்சில இருக்காங்க...

முன்னதாக கடந்த வாரம் கன்னையா குமார் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தால், அதை எதிர்க்கப்போவது இல்லை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ் பாஸ்ஸி தெரிவித்து இருந்த நிலையில், இன்று ஜாமீன் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தரப்பு திடீர் பல்டி அடித்துள்ளது.  இருப்பினும், ஜாமீன் மனுவை எதிர்ப்பதை நியாயப்படுத்தியுள்ள நான் கூறிய சூழல்நிலை தற்போது முற்றிலும் மாறிவிட்டது. எனவே ஜாமீன் மனுவை எதிர்க்கிறோம்” என்றார் dailythathanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக