சனி, 20 பிப்ரவரி, 2016

குஷ்பு இளங்கோவனின் பாட்டியாம்...EVKS இன் இன்றைய பட்டாசு

தமிழக காங்கிரஸ் தலைவர் இளாங்கோவன் இன்று பேசியபோது, குஷ்பு எனக்கு ஒரு வகையில்  பாட்டி முறை ஆகிறார் என்றார். பெரியார் திரைப்படத்தில் பெரியாராக நடிகர்   சத்யராஜ் மற்றும் அவரது மனைவி மணியம்மையாக குஷ்புவும் நடித்திருந்தார். பெரியாரின் மனைவி என்றால் எனக்கு குஷ்பு பாட்டி முறை தானே எனக்கூறி இளங்கோவன் சிரித்தார். மேலும் பேசிய அவர் நாம் ஒரு கூட்டமாக இல்லாமல் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களாக பழகுவது தான் காங்கிரஸ் கட்சியின் சிறப்பாகும் என்றார். மக்களுக்காக தியாகம் செய்த ஒரே தலைவர் சோனியாகாந்தி.
தன்னை தேடி பிரதமர்  பதவியே வந்த போதிலும் அதை ஏற்க மறுத்த உன்னதமான தலைவர்  சோனியா என்றார்.அவரை வீணாக வெளிநாட்டுக்காரர் எனக்கூறி எதிர்கட்சிகள் விமர்சனம் செய்த போதிலும், தனது கணவர், மாமியாரின் வழியில் இந்த நாட்டை  காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அரசியலுக்கு வந்து இந்திய பெண்களின் மானம் காத்தவர் என்றார் இளங்கோவன்  வெப்துனியா.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக