சனி, 13 பிப்ரவரி, 2016

சிரியாவில் சண்டை நிறுத்தம்? ஐ எஸ் பயங்கரவாதிகளின் முடிவை பொறுத்து உலகநாடுகள்..

முனிச்: மேற்காசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில், பயங்கரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வரும் அமெரிக்க கூட்டுப்படைகள், தாக்குதலை நிறுத்தி வைக்க ஒப்புக் கொண்டுள்ளன.சிரியாவில், பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டையால், 2 லட்சத்து, 50 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்; லட்சக்கணக்கனோர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.இதையடுத்து, அங்கு அமைதியை ஏற்படுத்த, சண்டை நிறுத்தம் மேற்கொள்வது என, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூட்டாக முடிவு செய்துள்ளன. இதற்கான நடவடிக்கையை, ஐ.நா., விரைவில் துவங்கவுள்ளது. எனினும், அங்கு செயல்பட்டு வரும், ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களின் முடிவை பொறுத்தே, சண்டை நிறுத்தம் அமலாகுமா என தெரிய வரும். தினமலர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக