சனி, 13 பிப்ரவரி, 2016

ஒடிசா: வீடியோ கான்பரன்சிங்கில் பேசியபடியே தூக்குப் போட்டு இறந்த ஆராய்ச்சி மாணவி

ஒடிசாவில் ஆராய்ச்சி மாணவி ஒருவர், தனது நண்பருடன் செல்போனில் வீடியோ கான்பரன்சிங் பேசிக் கொண்டே தூக்குப் போட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஐஎம்எம்டியின் ஆராய்ச்சி மாணவியாக இருந்தவர் சுபலஷ்மி அர்ச்சனா (34).
மான்சேஷ்வரில் தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது தற்கெலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
நாக்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு, தனது தோழி ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாகவும், அதனை தடுக்குமாறும், அவளது முகவரியை அளித்தார்.
இளைஞர் கொடுத்த முகவரிக்கு காவல்துறையினர் விரைந்து சென்ற போது, கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அந்த பெண் வீடியோ கான்பரன்சிங்கில், ஆண் நண்பருடன் பேசிக் கொண்டே தூக்கில் தொங்கியதும், அவளது செல்போனில், தூக்கில் தொங்குவது சரியாக தெரியும் வகையில் ஜன்னலில் வைத்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக