தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் அறிக்கையில்,
’’கும்பகோணத்தில் நடைபெற உள்ள மகாமக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து
தமிழக முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் எனச் செய்திகள்
வெளியாகியுள்ளது. மகாமக விழாவில் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி
சசிகலாவும் கலந்து கொண்டு குளிப்பார்கள் என்ற செய்தியே மக்களுக்கு பெரும்
பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு
ஏற்பாடுகள் என்ற பெயரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நீராட வரும்
பக்தர்களை அவஸ்தைகளுக்கு ஆளாக்காமல், அவர்கள் நிம்மதியுடன் புனித நீராடிச்
செல்ல முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் மகாமக விழாவிற்கு
குளிக்கச் செல்லாமல் தவிர்ப்பதே தமிழக மக்களுக்கு செய்யும் பேருதவியாக
இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறேன் ஞாபகம் இருக்கிறதா கும்பகோணம் 29: 26.2.92
.இல் நூற்று கணக்கானவர்கள் மிதிபட்டு மரணித்தார்களே...? nakkheeran,in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக