வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

நிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர் : மனைவி புகார்

தர்மபுரி இலக்கியம்பட்டி பாரதிபுரம் மருத்துவ குடியிருப்பில் வசித்து வரும் டாக்டர் செல்வராஜ் (50), தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி கல்பனா இறந்து விட்டார்.   மனைவி இறந்ததைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியை சேர்ந்த வையாபுரி மகள் கார்த்திகா (28)வை செல்வராஜ் 2–வது திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் நடைபெற்று 1 வருடம் அவர்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினர். இந்த நிலையில் அவ்வப்போது பூஜை செய்ய செல்வராஜ் வெளியில் சென்று வந்தார். இதை கண்ட அவரது மனைவி கார்த்திகா ஏதோ ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளதால் சென்று வருவதாக நினைத்து அதை கண்டு கொள்ளவில்லை. Moral of this story : என்னத்தை படிச்சாலும் பட்டம் வாங்கினாலும்  கேப்மாரி  கேப்மாரிதாய்ன்

இதனால் வெளியில் பூஜை செய்து வந்த பேராசிரியர் செல்வராஜ் நாளடைவில் தனது வீட்டில் ஒரு நாற்காலியில் நிர்வாணமாக அமர்ந்து பூஜை செய்ய ஆரம்பித்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பல முறை மருத்துவராகிய நீங்கள் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று கூறியும் அவர்கேட்கவில்லை.
தொடர்ந்து அவர் நிர்வாண பூஜை செய்து வந்தார். இதனால் என்ன செய்வதென்று தெரியாத கார்த்திகா ஏற்கனவே கணவனை இழந்து தற்போது மற்றொரு கணவனும் இது போன்ற செயலில் மூழ்கி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்."
இருந்தாலும் கணவரின் ஆதரவில் வாழ்ந்து வருவதால் அவர் ஏதோ ஒன்றை செய்து கொள்ளட்டும் என்று கண்டும் காணாமலும் இருந்து வந்தார்.  இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அவரது மனைவி கார்த்திகாவையும் நிர்வாண பூஜை செய்யவேண்டும் என்று டாக்டர் செல்வராஜ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு கார்த்திகா உடன் படாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு அடிக்கடி அவரது பெற்றோர்கள் வீடான ஓமலூர் அருகே உள்ள எலத்தூருக்கு கார்த்திகா வந்து விடுவது வழக்கம்.

இந்த நிலையில் விவாகரத்து செய்வதாக கார்த்திகாவுக்கு பேராசிரியர் நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.இதை கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்த கார்த்திகா தனது பாட்டி மற்றும் தாய் ஆகியோரை அழைத்து கொண்டு கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது நிர்வாண பூஜையில் இருந்த கணவனை பார்த்து இனி சேர்ந்து வாழலாம் என்றும், இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறினார்.

ஆனால் பேராசிரியர் செல்வராஜ் என்னுடன் வாழ வேண்டும் என்றால் நான் கூறுவது போல் நீயும் நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் உன்னை விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்றும் மிரட்டியதாக அவரது மனைவி கூறினார்.
இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தன்னை அடித்து உதைத்ததால் காயம் அடைந்ததாக கூறி கார்த்திகா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக