ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

சரத்குமார் :எவ்வளவு சீட் கொடுத்தாலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது..என்னா நேர்மை?


நாகர்கோவிலில் சமத்துவ மக்கள் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் கலந்து கொண்டார்.கூட்டத்தில் பேசிய அவர், சமத்துவ மக்கள் கட்சியை அதிமுக கருவேப்பிலையை போல் பயன்படுத்தியது. இனி எவ்வளவு சீட் கொடுத்தாலும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. கூட்டணி தர்மம் குறித்து தெரியாதவர்கள், ஏன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும்.நேற்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்துவிட்டது. இனி ஒரு சிறந்த ஆட்சி அமைவதற்கு நாம் எப்படி பயணிக்கப் போகின்றோம் என்று முடிவு எடுக்க வேண்டும்.கடைசி பேருந்து ஆட்டோ கட்டைவண்டி எல்லாத்துக்கும் காத்திருந்து விட்டு  சீ சீ இந்த அதிமுக புளிக்கும்
இன்னும் 10 நாளில் எந்த கூட்டணி குறித்து முடிவு எடுக்கப் போகிறோம். ஆனால் நிச்சயமாக இப்ப இருக்கிற கூட்டணியில் இருக்க மாட்டோம். சட்டமன்றத் தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட விரும்புகிறது. அவ்வாறு போட்டியிட்டால்தான் சமத்துவ மக்கள் கட்சிக்கு மக்களிடம் எத்தகைய ஆதரவு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.nakkheeran,in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக