வியாழன், 18 பிப்ரவரி, 2016

ட்ராபிக் ராமசாமி: விஜயகாந்த் கட்சி தேர்தலை தனியேதான் சந்திக்கும் என்று கருதுகிறேன்

தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில்
கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன. ஏற்கனவே, திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி விட்டது. தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க திமுக, பாஜக உள்ளிட்ட ஒவ்வொரு கட்சிகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தை டிராபிக் ராமசாமி இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் டிராபிக் ராமசாமி. அப்போது அவர் கூறியதாவது:- விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளுடன் தேமுதிக கூட்டணி வைக்கப்போவதில்லை என்பதை விஜயகாந்த் பேசியதில் இருந்து தெரிந்துகொண்டேன். இந்தத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட வேண்டும். விஜயகாந்திற்கு எனது முழு ஆதரவு உண்டு' என அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக