வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

திருமாவளவன் :திமுக, அதிமுக கூட்டணிக்கும் போகமுடியும்.... ஆனா ம.ந. கூட்டணியில் நீடிப்போம்...

திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவுடன் நல்லுறவு இருப்பதால் நாங்கள் நினைத்தால் அக்கட்சிகளின் தலைமையிலான கூட்டணிக்கும் போக முடியும். ஆனாலும் மக்கள் நலக் கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிப்போம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வைகோவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட மக்கள் நலக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதிமுக, திமுகவுக்கு மாற்று என்ற முழக்கத்தை முன்வைத்து இக்கூட்டணித் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டுக்கு தொல். திருமாவளவன் அளித்துள்ள பேட்டி:

திமுக, அதிமுகவுடன் எங்களுக்கு சுமூகமான உறவு இருந்தது என்பதை பல கூட்டங்களில் கூறியிருக்கிறேன்... தற்போதும் கூட இரு கட்சிகளுடன் நல்லுறவு உள்ளது.

போகலாம்...ஆனால் போகலை நாங்கள் நினைத்தால் அதிமுக அல்லது திமுக கூட்டணிக்கு எங்களால் போக முடியும். ஆனால் மக்கள் நலக் கூட்டணியிலேயே நாங்கள் தொடர்கிறோம். திராவிட கட்சிகளுக்கு மாற்றாகத்தான் மக்கள் நலக் கூட்டணியை நாங்கள் உருவாக்கினோம். ஆகையால் திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெறவில்லை
அதிமுக, திமுக கூட்டணியில் நாங்கள் இடம்பெறமாட்டோம். எப்போது மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கினோமோ அப்போதே இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவிட்டோம். எங்களால் காங்கிரஸ், பாஜக, பாமக இருக்கும் கூட்டணிக்கு போக முடியாது. திமுக, அதிமுகவை விமர்சிப்பது என்பது என்னுடைய அரசியல் பாணி.
விஜயகாந்த், வாசன் மக்கள் நலக் கூட்டணியின் ஊழல் ஒழிப்பு, மதுவிலக்கு ஆகிய கொள்கைகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் எங்களுடன் ஒத்துப் போகிறார். இதுவரை மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெறுவதாக அவர் கூறவில்லை. அதே நேரத்தில் இதை அவர் எதிர்க்கவும் இல்லை. தமாகா தலைவர் வாசனைப் பொறுத்தவரையில் மூத்த தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாக கூறியுள்ளார்
தலித் முதல்வர் விவகாரம் தமிழகத்தில் தலித் முதல்வர்கள் என்று யாரும் இல்லை. எங்களது பொதுச்செயலர் ரவிக்குமார், தலித் ஒருவரை முதல்வராக்க வேண்டும் என்று 2014-ல் தன்னுடைய இணையப்பக்கத்தில் எழுதியிருந்தார். அவர் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஒரு தலித்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. மக்கள் நலக் கூட்டணியின் அனைத்து தலைவர்களுமே 'முதல்வர் வேட்பாளரை' முன்னிறுத்துவதில்லை என முடிவெடுத்துள்ளோம்.
திமுகவுடன் மோதல் ஏன் 2011 சட்ட்டசபை தேர்தலில் நாங்கள் 10 தொகுதிகளிலும் பாமக 27 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தோம். இந்த தேர்தலுக்கு பின்னர் எங்களுடன் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகளின் வாக்குகள் எப்படியெல்லாம் பாமகவுக்கு கிடைத்திருக்கிறது என கூறினார். ஆனால் திமுகவோ, தேர்தல் தோல்விக்கு விடுதலைச் சிறுத்தைகளும் பாமகவும் காரணம் என கூறியது. விடுதலை சிறுத்தைகளும் பாமகவும்தான் காரணம் எனில் திமுக வேட்பாளர்கள் தோற்றது எப்படி? ஸ்பெக்ட்ரம் ஊழலால் 60% கட்சி சாராத வாக்காளர்கள் ஒட்டுமொத்த திமுக கூட்டணியையே நிராகரித்துவிட்டனர்.
பாமகவுடன் பஞ்சாயத்து என்ன? பாமகவைப் பொறுத்தவரையில் வன்னியர் ஜாதி கட்சி என்ற அடையாளத்தை மீண்டும் கையிலெடுத்தது; ராமதாஸ் மகன் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியது; ஜாதி மறுப்பு திருமணங்களை முன்வைத்து என்னையும் விடுதலைச் சிறுத்தைகளையும் கடுமையாக விமர்சித்தார். இதுதான் பாமகவுடனான முரண்பாட்டுக்கு காரணம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
உடைகிறது ம.ந. கூட்டணி? அதிமுக கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளை சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திருமாவளவன் திடீரென, அதிமுக, திமுகவுடன் நல்லுறவு இருக்கிறது; நாங்கள் நினைத்தால் இப்போதும் அந்த கட்சிகளின் தலைமையிலான கூட்டணிக்கு போக முடியும் எனக் கூறியிருப்பது அந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. மேலும் திமுக பக்கம் விடுதலைச் சிறுத்தைகள் செல்ல வாய்ப்பில்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் 2011 தேர்தல் விவகாரங்களையும் திருமாவளவன் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக