செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

சரிதா நாயர்: அரசியல் வாதிகள் என்னை உடல், மன ரீதியாக பயன்படுத்தினார்கள்

திருவனந்தபுரம்: பல அரசியல்வாதிகள் தன்னை உடல் ரீதியாகவும், மன
ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டதாக சோலார் பேனல் மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் தெரிவித்துள்ளார். சோலார் பேனல் மோசடி வழக்கை விசாரித்து வரும் கமிஷன் முன்பு தொழில் அதிபர் சரிதா நாயர் திங்கட்கிழமை ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
அப்போது அவர் அரசியல் தலைவர்கள் மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தியதோடு அதை நிரூபிக்கும் வகையில் 3 சி.டி.க்களையும் அளித்தார். Politicians 'used' me, says Kerala solar scam accused Saritha Nair விசாரணை கமிஷன் முன்பு அவர் கூறுகையில், இன்று நான் ஆடியோ மற்றும் வீடியோ சி.டி.க்களை அளித்துள்ளேன். அவற்றில் காங்கிரஸ் தலைவர் தம்பனூர் ரவி, எம்.எல்.ஏ. பென்னி பெஹனன், முதல்வர் உம்மன் சாண்டியின் முன்னாள் பாதுகாவலர் சலிம் ராஜ், தொழில் அதிபர் ஆபிரகாம் கல்லிமன்னல் ஆகியோருடனான உரையாடல் உள்ளது.
இந்த வழக்கு குறித்து நான் மேலும் எதுவும் தெரிவிக்கக் கூடாது என்று அவர்கள் என்னை மிரட்டி வருகிறார்கள். நான் மேலும் பல ஆதாரங்களை எடுத்து வந்து தருகிறேன். பல அரசியல் தலைவர்கள் என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டனர் என்றார். தான் முதல்வர் உம்மன் சாண்டிக்கு ரூ.1.90 கோடி லஞ்சம் அளித்ததாக சரிதா நாயர் முன்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. /tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக