செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ஆ.ராசா: மன்மோகன்சிங்கிடம் தெரிவித்தே முடிவுகளை எடுத்தேன்: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு....

ஆ.ராசா ஒரு பைசா கூட ஆதாயம் பெறவில்லை. அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும், ‘புதிய தொலைத்தொடர்பு கொள்கை-1999‘ என்ற கண்ணாடி மூலமாகவே பார்க்க வேண்டும். அந்த கொள்கையின் நோக்கம் நிறைவேறியதா? இல்லையா? மன்மோகன்சிங் அரசில், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா, மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்தபோது, 122 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கியதில், அரசுக்கு ரூ.30 ஆயிரத்து 984 கோடி இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது. ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்பட 17 பேர் மீது இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி, 122 உரிமங்களையும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததுடன், ஏல முறையில் அவற்றை ஒதுக்கீடு செய்யுமாறு உத்தரவிட்டது.



டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில், நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வரும் இவ்வழக்கின் இறுதி வாதம் நேற்று தொடங்கியது. ஆ.ராசா தரப்பின் இறுதி வாதத்தின்போது, அவருடைய வக்கீல் மனு சர்மா கூறியதாவது:-

என் கட்சிக்காரர் ஆ.ராசா எடுத்த முடிவுகள் அனைத்தும் மத்திய தொலைத்தொடர்பு துறையின் யோசனைகள்தான். அதிலிருந்து விலகிச் செல்லவில்லை. அனைத்து முடிவுகளும் கருத்தொற்றுமையுடன் எடுக்கப்பட்டன.

முக்கியமான கட்டங்களில், எல்லா முடிவுகளும் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் மத்திய மந்திரிகளாக இருந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அப்போதைய மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி, அப்போதைய அட்டார்னி ஜெனரல் ஜி.இ.வாகன்வதி ஆகியோரின் சம்மதமும் பெறப்பட்டது.

ஆ.ராசா எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பொது பார்வைக்கு வைக்கப்பட்டன. பாராளுமன்றத்தில் கூட தகவல் தெரிவிக்கப்பட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலம், ஆ.ராசா ஒரு பைசா கூட ஆதாயம் பெறவில்லை. அவரது ஒவ்வொரு நடவடிக்கையையும், ‘புதிய தொலைத்தொடர்பு கொள்கை-1999‘ என்ற கண்ணாடி மூலமாகவே பார்க்க வேண்டும். அந்த கொள்கையின் நோக்கம் நிறைவேறியதா? இல்லையா? என்று சரிபார்க்க வேண்டும்.  maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக