சனி, 13 பிப்ரவரி, 2016

ராஜ்யசபாவில் 73 எம்.பி.,க்கள் பதவி இந்தாண்டு முடிவடைகிறது

தமிழக எம்.பி.,க்கள்வரும், ஜூன் மாதம் ௨௯ம் தேதி பதவி காலம் முடிவடையுள்ள,
தமிழக எம்.பி.,க்கள்: ரபிபெர்னார்ட் - அ.தி.மு.க.,சுதர்சன நாச்சியப்பன் - காங்.,
நவநீதகிருஷ்ணன் - அ.தி.மு.க.,
மனோஜ்பாண்டியன் - அ.தி.மு.க.,
கே.பி.ராமலிங்கம் - தி.மு.க.,
தங்கவேலு - தி.மு.க.,
மணிசங்கர் அய்யர் - காங்., (21.3.2016)
 காங்கிரஸ், பா.ஜ., பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் என முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, அரசியல் ஜாம்பவான்கள் உட்பட, 73 பேரின், ராஜ்யசபா, எம்.பி., பதவிகாலம், இந்த ஆண்டுடன் நிறைவடைகிறது. கடந்த லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன், பா.ஜ., வெற்றி பெற்றதையடுத்து, நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைந்தது.
அப்போது முதல், லோக்சபாவில் முக்கிய மசோதாக்கள் எல்லாம், எந்தவிதமான தடங்கலுமின்றி, எளிதாக நிறைவேறி வருகிறது. அதே மசோதாக்கள், ராஜ்யசபாவில் ஒப்புதலுக்கு போகும் போது, சிக்கலை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. ராஜ்யசபாவில், காங்கிரசுக்கு, 67 எம்.பி.,க்கள் உள்ளனர்; பா.ஜ.,வுக்கு, 48 எம்.பி.,க்கள் உள்ளனர். ராஜ்யசபாவில், காங்கிரசின் பலம் ஓங்கியுள்ளதால், நிலம் கையகப்படுத்தும் மசோதா, ஜி.எஸ்.டி., மசோதா என, முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்களை, அரசால் நிறைவேற்ற முடியவில்லை.
இந்நிலையில், இந்த ஆண்டில், ராஜ்யசபா எம்.பி.,க்கள், 73 பேரின் பதவி காலம் முடிவடைகிறது. ஒரே ஆண்டில், இவ்வளவு அதிகமான, எம்.பி.,க்கள் ஓய்வு பெறுவதால், சபையில், முக்கிய கட்சிகளின் பலத்தில், மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், தேசிய அரசியலிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.

தமிழக எம்.பி.,க்கள்வரும், ஜூன் மாதம் ௨௯ம் தேதி பதவி காலம் முடிவடையுள்ள,
தமிழக எம்.பி.,க்கள்: ரபிபெர்னார்ட் - அ.தி.மு.க.,சுதர்சன நாச்சியப்பன் - காங்.,
நவநீதகிருஷ்ணன் - அ.தி.மு.க.,
மனோஜ்பாண்டியன் - அ.தி.மு.க.,
கே.பி.ராமலிங்கம் - தி.மு.க.,
தங்கவேலு - தி.மு.க.,
மணிசங்கர் அய்யர் - காங்., (21.3.2016)

காங்கிரஸ்

அந்தோணி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், மோஷினா கித்வாய், அம்பிகா சோனி, அஸ்வனி குமார், ஆனந்த் சர்மா, ஜெய்ராம் ரமேஷ், ஹனுமந்தராவ், சதீஷ் சர்மா உட்பட பலர்.
பா.ஜ.,
பா.ஜ.,வில், மத்திய அமைச்சர் பதவியில் உள்ள பலரது, எம்.பி., பதவி காலம், இந்த ஆண்டுடன் முடிவடைய உள்ளது. அவர்களில், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, மின் துறை அமைச்சர் பீயுஷ் கோயல், பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரேந்தர் சிங், வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சிலர்.
ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவின் பதவியும், இந்தாண்டுடன் முடிவடைகிறது.dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக