ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

அமெரிக்கா 14 வயது மாணவனுக்கு 65 வருட சிறை....ஆசிரியை பாலியல் வன்முறை, கொலை...


அமெரிக்க நாட்டில் ஆசிரியை ஒருவரை பள்ளி கழிவறையில் கற்பழித்து கொடூரமாக கொலை செய்த 14 வயது மாணவனுக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள டன்வெர்ஸ் உயர் நிலைப்பள்ளியில் கொலீன் ரிட்சர்(அப்போதைய வயது 24) என்ற பெண் கணக்கு வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இதே வகுப்பில் ஃபிலிப் சிஸ்ம்(அப்போதைய வயது 14) என்ற மாணவனும் பயின்று வந்துள்ளான்.
மாணவனுக்கு இளம் ஆசிரியரின் மீது எப்போதும் ஒரு மோகம் இருந்து வந்துள்ளது. அவரை எப்படியாவது தனது ஆசைக்கு இணங்க வைக்க வேண்டும் என சரியான நேரத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்துள்ளான்.
இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 22ம் திகதி அந்த வாய்ப்பு மாணவனுக்கு அமைந்துள்ளது.
பள்ளி வகுப்பை முடித்த ஆசிரியை அங்குள்ள கழிவறை நோக்கி சென்றுள்ளார். ஆசிரியருக்கு தெரியாமல், மாணவனும் பின் தொடர்ந்து சென்றுள்ளான்.  அடடா இந்த சின்னஞ்சிறுவன்  இங்கே பிறந்திருந்தால் இவனுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாயும்,  கடையும் வைத்து கொடுத்திருப்போம்ல .....

அப்போது, கழிவறையில் நுழைந்தவுடன் மாணவனும் உள்ளே நுழைந்து கதவினை தாழிட்டுள்ளான். மாணவனின் செய்கையை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் கத்தி கூச்சலிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவன் அருகில் உள்ள இரும்பு பெட்டிகளை அறுக்கும் நீண்ட கத்தியை எடுத்து ஆசிரியை சரமாரியாக தாக்கியுள்ளான்.
பின்னர், மயக்கமுற்ற ஆசிரியை தனது மோகம் தீர கற்பழித்துள்ளான். எல்லாம் முடிந்த பிறகு, ஆசிரியை அதே ஆயுதத்தை கொண்டு சரமாரியாக தாக்கியே கொன்றுள்ளான்.
கழிவறைக்கு வெளியே வந்து பார்த்தபோது, அங்கு குப்பைகளை அடைக்கும் பிளாஸ்டிக் பெட்டி இருந்துள்ளது.
அதனை எடுத்து வந்து ஆசிரியையை அதில் அடைத்து மூடிவிட்டு, அங்கிருந்து இழுத்துக்கொண்டு அருகில் உள்ள அடர்ந்த காட்டில் புதைத்துவிட்டு வீடு திரும்பியுள்ளான்.
அதே நாள் இரவில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற அந்த மாணவன் சினிமா டிக்கெட்டை எடுக்க ஆசிரியரிடமிருந்து திருடிய கிரிடிட் கார்டை பயன்படுத்தியபோது பொலிசாரிடம் சிக்கினான்.
பொலிசார் நடத்திய விசாரணையில் நடந்த அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டான்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, ஆசிரியை கொலை செய்த குற்றத்திற்காக 25 ஆண்டுகளும், அவரை கொடூரமாக கற்பழித்து அவரிடமிருந்த பொருட்களை கொள்ளையிட்ட குற்றங்களுக்காக 40 வருடங்கள் என 65 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். webdunia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக